Ather EV offer: ஏகப்பட்ட சலுகையுடன் ஏதர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! இப்ப இல்லாட்டி எப்ப வாங்குறது?

Published : Oct 31, 2023, 04:06 PM ISTUpdated : Oct 31, 2023, 04:08 PM IST

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணியில் இருக்கும் ஏதர் எனர்ஜி நிறுவனம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிறப்புச் சலுகை விலையில் 450S மற்றும் 450X மாடல் மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்கிறது.

PREV
15
Ather EV offer: ஏகப்பட்ட சலுகையுடன் ஏதர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! இப்ப இல்லாட்டி எப்ப வாங்குறது?
Ather Energy Diwali Offer 2023

ஏதர் எனர்ஜி நிறுவனம் அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களான ஏதர் 450S மற்றும் ஏதர் 450X ஆகியவற்றுக்கு பண்டிகைக் கால சலுகைகளை வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பெட்ரோல் ஸ்கூட்டர்களில் இருந்து மின்சார ஸ்கூட்டருக்கு மாறுவதற்கு ஊக்குவிக்கும் நடவடிக்கையாக அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

25
Ather 450X Exchange offer

பெட்ரோலில் இயங்கும் இருசக்கர பைக்குகளை எக்ஸ்சேஞ்ச் செய்தால் அதற்கு ரூ.40,000 வரை எக்ஸ்சேஜ் வேல்யூ வழங்குகிறது. இந்தத் தொகையை அப்படியே புதிய ஏதர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவதற்கான முன்பணமாகப் பயன்படுத்தலாம் என்று ஏதர் நிறுவனம் கூறுகிறது.

35
Ather 450S Core Exchange Value

டெல்லியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மானியும் கிடைப்பதால், எக்ஸ்சேஜ் மதிப்புடன் சேர்த்தால் Ather 450S (Core) ஸ்கூட்டரை ரூ.72,549 க்கு வாங்கலாம். Ather 450S (Pro) ஸ்கூட்டரை ரூ.80,050 க்கு வாங்க முடியும். அதே நேரத்தில், Ather 450X மாடல்களுக்கும் இதே சலுகை உண்டு. மேலும், 2.9 kWh மாடல் ரூ.95,050 க்கும், 3.7 kWh மாடல் ரூ.1.04 லட்சம் க்கும் கிடைக்கும்.

45
Ather 450S Pro Price

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்தச் சலுகை நவம்பர் 15ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும். ஏதர் எனர்ஜி விற்பனையை அதிகரிக்க கூடுதல் பலன்களுடன் சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 450S மற்றும் 450X ஸ்கூட்டர்களை வாங்கினால், பண்டிகைக் காலத் தள்ளுபடி ரூ. 5,000, கார்ப்பரேட் தள்ளுபடி ரூ.1,500 மற்றும் கிரெடிட் கார்டு EMI கேஷ்பேக் ரூ.6,000 ஆகியவை கிடைக்கும்.

55
Ather EMI Scheme for 24 months

மேலும் பலரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் வசதியை அதிகரிக்க 24 மாதங்களுக்கான சிறப்பு EMI திட்டத்தையும் ஏதர் ஏற்பாடு செய்துள்ளது. இத்திட்டத்தில் வெறும் 5.99 சதவீத வட்டி விகிதம் மட்டுமே விதிக்கப்படுவதால், வட்டிச் செலவில் ரூ.12,000 வரை சேமிக்க முடியும் எனவும் ஏதர் சொல்கிறது.

click me!

Recommended Stories