ஓலா, ஏதர் எல்லாம் ஓரமா போங்க... கம்மி விலையில் வருகிறது கோகோரோ! எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க செம சாய்ஸ்!

First Published | Oct 25, 2023, 9:00 AM IST

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவையை அதிகரித்து வரும் சூழலில் தைவானில் இருந்து கோகோரோ (Gogoro) என்ற புதிய பிராண்ட் ஒன்று குறைந்த விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய வருகிறது.

Gogoro GX250 price in India

தைவானைச் சேர்ந்த கோகோரோ (Gogoro) நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. Gogoro GX250 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர், குறிப்பாக இந்தியச் சந்தையின் தேவையை கவனத்தில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

Gogoro GX250 launch in India

7-கிலோவாட் பேட்டரியுடன் உருவாகியுள்ள இந்த பைக்கில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை முழு சார்ஜ் செய்ய சுமார் 3 மணிநேரம் எடுக்கும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 112 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம்.

Tap to resize

Gogoro GX250 EV

இதில் உள்ள வசதிகளை வைத்துப் பார்க்கும்போது கோகோரோ நிறுவனத்தின் GX250 மிகவும் மலிவு விலை ஸ்கூட்டராக இருக்கும். இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருடன் கோகோரோ டிலைட், விவா மற்றும் எஸ்1 போன்ற மாடல்களையும் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த கோகோரா திட்டமிட்டுள்ளது.

Gogoro GX250 specs

Gogoro GX250 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான விலை குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இந்த ஸ்கூட்டரின் விலை சுமார் 60,000 ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் 2024 ஜனவரி அல்லது பிப்ரவரியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2024 நிகழ்வில் கோகோரோ ஸ்கூட்டர் வெளியிடப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Gogoro GX250 electric scooter

ஒட்டுமொத்தமாக, கோகோரோவின் இந்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியச் சந்தையில் நுழைவது மின்சார வாகனங்களுக்கான தேவையை பிரதிபலிப்பதாக உள்ளது. வாடிக்கையாளர்களை ஈர்க்கக்கூடிய மலிவு விலையில் இருக்கும் Gogoro GX250 ஓலா மற்றும் ஏதர் நிறுவனங்களின் பைக்குகளுக்கு போட்டியாக இருக்க வாய்ப்பு உள்ளது.

Latest Videos

click me!