XUV400 காருக்கு ரூ.3.5 லட்சம் தள்ளுபடி! நம்பமுடியாத சலுகைகளை வாரி வழங்கும் மஹிந்திரா!

First Published | Nov 9, 2023, 7:46 PM IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மஹிந்திரா நிறுவனத்தின் XUV300, XUV400 உள்ளிட்ட பல கார்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Mahindra Diwali offers

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மஹிந்திரா நிறுவனத்தின் கார்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக XUV300, XUV400, பொலிரோ நியோ காம்பேக்ட், மராசோ எம்.பி.வி. மற்றும் பொலிரோ எஸ்.யு.வி. ஆகிய கார்களுக்கு சிறப்பான சலுகை கிடைக்கிறது.

Mahindra SUV discounts

மஹிந்திரா XUV400 கார் ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் வரை தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தக் காரின் டாப் மாடலிலும் இந்தச் சலுகைக் கிடைக்கிறது. இதே காரின் EL வேரியண்ட் ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது. EC வேரியண்ட் ரூ. 1.5 லட்சம் வரை தள்ளுபடியில் விற்பனையாகிறது.

Tap to resize

Mahindra XUV400

மஹிந்திரா XUV 400 கார் அறிமுகமானது முதல் கார் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தக் கார் டாடா நிறுவனத்தின் நெக்ஸான் EV, MG ZS EV போன்ற எலெக்ட்ரிக் கார்களுடன் விற்பனடையில் போட்டியிடும் என்று கருதப்படுகிறது.

Mahindra SUVs Diwali Discount Price

மஹிந்திரா XUV300 காருக்கு ரூ. 1.2 லட்சம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதேபோல, மஹிந்திரா மராசோவுக்கு 73,300 ரூபாயும், பொலிரோ காருக்கு 70,000 ரூபாயும், பொலிரோ நியோ காருக்கு 50,000 ரூபாயும் தள்ளுபடி தரப்படுகிறது. இந்தச் சலுகை மாடலுக்கு ஏற்ப மாற்றம் அடையும். ஸ்டாக் இருப்பதைப் பொறுத்தும் விலையில் மாற்றம் இருக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

Latest Videos

click me!