Best Family Cars: ரூ.5 லட்சத்திற்குள் டாப் 3 ஃபேமிலி கார்கள்! மைலேஜும் அதிகம்! வாரண்டியும் கியாரண்டி!

Published : May 23, 2026, 04:25 PM IST

Best Family Cars: இந்தியாவில் ரூ.5 லட்சத்துக்குள் கிடைக்கும் டாப் 3 ஃபேமிலி கார்கள் குறித்தும், இவற்றின் சிறப்பம்சங்கள் குறித்தும் இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
14
ரூ.5 லட்சத்துக்குள் கிடைக்கும் டாப் 3 ஃபேமிலி கார்கள்

இந்தியாவில் கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டு கார்களை களமிறக்கி வருகின்றன. ரூ. 5 லட்சம் பட்ஜெட்டிற்குள் கார் வாங்குவது நடுத்தர குடும்பங்களின் நீண்ட கால கனவாகும். அந்த வகையில் ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் கார்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

24
மாருதி சுசுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10)

இந்திய சாலைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் 'ஆல்டோ' பிராண்டின் தற்போதைய நவீன வடிவமே இந்த ஆல்டோ கே10 ஆகும். இது சிறிய குடும்பங்களுக்கு மிகவும் பொருத்தமானது. இந்த காரின் ஆரம்ப விலை சுமார் ரூ.3.70 லட்சம் ஆகும் இந்த மாடலில் 998 cc கொள்ளளவு கொண்ட 3-சிலிண்டர் K10C பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 66.62 bhp பவரையும், 89 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும். 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி (AMT/AGS) ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன.

இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 24.90 கி.மீ மைலேஜ் கொடுக்கிறது. இந்த மாடலில் ஸ்மார்ட் பிளே ஸ்டுடியோ டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம். டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் டிஸ்ப்ளே உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. மாருதி சுசுகி நிறுவனம் இந்த காருக்கு 2 ஆண்டுகள் அல்லது 40,000 கிலோமீட்டர் (எது முதலாவதோ) நிலையான வாரண்டியை வழங்குகிறது. இதனை கூடுதல் கட்டணம் செலுத்தி 5 ஆண்டுகள் வரை நீட்டித்துக் கொள்ள முடியும்.

34
மாருதி சுசுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso)

மலிவான விலையில் ஒரு மைக்ரோ-எஸ்யூவி (Micro-SUV) காரில் பயணிக்கும் உணர்வைத் தரக்கூடிய கார் இது. இதன் உயரமான வடிவமைப்பு (Tall-boy design) காருக்குள் ஏறி இறங்குவதை எளிதாக்குகிறது. இதன் ஆரம்ப விலை சுமார் ரூ.3.50 லட்சம். 24.12 கி.மீ மைலேஜ் வழங்குகிறது. 

சென்ட்ரல் கன்சோலில் அமைந்துள்ள தனித்துவமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர். ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி கொண்ட டச்ஸ்கிரீன். கரடுமுரடான சாலைகளை எளிதாகக் கடக்க உதவும் 180mm கிரவுண்ட் கிளியரன்ஸ் என பல வசதிகள் உள்ளன. இந்த காருக்கு மாருதி நிறுவனத்தின் நிலையான 2 ஆண்டுகள் அல்லது 40,000 கிலோமீட்டர் வாரண்டி கொடுக்கப்படுகிறது.

44
ரெனால்ட் க்விட் (Renault Kwid)

பட்ஜெட் கார்களிலேயே மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்ட கார் பிரெஞ்சு தயாரிப்பான ரெனால்ட் க்விட் ஆகும். இதன் வடிவமைப்பு பிரீமியம் ரக கார்களைப் போன்ற தோற்றத்தை அளிக்கும். இந்த காரின் ஆரம்ப விலை சுமார் ரூ.4.69 லட்சம் முதல் தொடங்குகிறது. இந்த மாடலில் 999 cc ஸ்மார்ட் எஃபிசியன்சி பெட்ரோல் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது.

5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஈஸி-ஆர் ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 21.46 கி.மீ மைலேஜ் கொடுக்கிறது. இந்த காரில் டச்ஸ்கிரீன் மீடியாநாவ் சிஸ்டம், எல்இடி டிஆர்எல்கள் (மற்றும் எல்இடி டெயில் லேம்ப்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் டிராக்‌ஷன் கன்ட்ரோல் ஆகிய அம்சங்கள் உள்ளன. ரெனால்ட் நிறுவனம் இந்த காருக்கு 2 ஆண்டுகள் அல்லது 50,000 கிலோமீட்டர் வரையிலான சிறப்பான வாரண்டியை வழங்குகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories