இந்த மாதத்தின் மிகப்பெரிய சலுகை, நிறுவனத்தின் பிரீமியம் எஸ்யூவி மாடலான டிகுவான் ஆர்-லைனுக்கு வழங்கப்படுகிறது. இந்த காருக்கு ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும். ஆனால், இந்த முழுப் பலனும் எல்லா வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்காது. உங்கள் பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்வது, ஸ்கிராப்பேஜ் பாலிசி அல்லது நிறுவனத்துடனான உங்கள் லாயல்டி போன்ற நிபந்தனைகளைப் பொறுத்து இந்த சலுகையின் அளவு மாறும்.
டிகுவான் ஆர்-லைன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.47.11 லட்சம் ஆகும். இது ஹூண்டாய் டூஸான், ஜீப் மெரிடியன் மற்றும் ஸ்கோடா கோடியாக் போன்ற கார்களுக்குப் போட்டியாக, பிரீமியம் செக்மென்ட்டில் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது 204 PS பவரையும், 320 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும். மேலும், 7-ஸ்பீடு DSG கியர்பாக்ஸ் மற்றும் AWD சிஸ்டமும் இதில் உள்ளது. பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, 9 ஏர்பேக்குகள், ADAS லெவல் 2 வசதிகள், ஹெட்-அப் டிஸ்ப்ளே மற்றும் 15 இன்ச் பெரிய டச்ஸ்கிரீன் ஆகியவை இதில் அடங்கும்.