இந்திய ஹாட்ச்பேக் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய டாடா டியாகோ, தற்போது புதிய தோற்றத்தில் மீண்டும் வரத் தயாராகிறது. டியாகோ மற்றும் டியாகோ மின்சார மாடல்களின் புதிய வடிவமைப்பைக் குறிக்கும் டீசர்களை தொடர்ந்து வெளியிடும் டாடா மோட்டார்ஸ், இப்போது பெட்ரோல் மாடலின் உட்புறத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய காட்சி, டியாகோ வெறும் முகமாற்றம் பெற்ற கார் அல்ல, அனுபவத்தில் கூட பெரிய மாற்றத்தை நோக்கி செல்கிறது.