இத்தனை கோடிகளா? இந்தியாவில் கிடைக்கும் டாப் 10 விலை உயர்ந்த கார்கள்...!

First Published Jul 6, 2022, 2:47 PM IST

கொரோனா பெருந்தொற்றுக்கு பின் உலக நாடுகளில் விலை உயர்ந்த கார் மாடல்களின் விற்பனை அதிகரிக்க துவங்கி இருக்கிறது. 

இந்திய சந்தையில் கிடைக்கும் விலை உயர்ந்த ஆடம்பர கார் மாடல்களில் ரோல்ஸ் ராய்ஸ் ஃபேண்டம் முதலிடம் பிடித்து இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஃபேண்டம் மாடலின் விலை ரூ. 8 கோடியே 99 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 10 கோடியே 48 ஆயிரம் வரை நீள்கிறது. 

இதையும் படியுங்கள்: 780 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் புது எலெக்ட்ரிக் கார் - இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ்..!

விலை உயர்ந்த கார் மாடல்கள் பட்டியலில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த காரின் விலை ரூ. 6 கோடியே 95 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 7 கோடியே 95 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 6.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதையும் படியுங்கள்: விற்பனையில் திடீர் சரிவு... நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்ட ஓலா எலெக்ட்ரிக் - என்ன காரணம் தெரியுமா?

6.8 லிட்டர் என்ஜின் கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் டான் (dawn) மாடல் விலை உயர்ந்த கார் மாடல்களின் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்து உள்ளது. இது நான்கு பேர் பயணம் செய்யக் கூடிய கன்வெர்டிபில் மாடல் ஆகும். 

இதையும் படியுங்கள்: இந்திய விற்பனையில் மாஸ் காட்டிய டாப் 5 கார்கள்... எந்தெந்த மாடல்கள் தெரியுமா?

முதல் மூன்று இடங்களை ரோல்ஸ் ராய்ஸ் பிடித்த நிலையில், நான்காவது இடத்தில் ஃபெராரி SF90 ஸ்டிரேடேல் மாடல் உள்ளது. இந்த காரில் 4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் விலை ரூ. 7 கோடியே 50 லட்சம் ஆகும். 

இந்திய சந்தையில் ஐந்தாவது விலை உயர்ந்த கார் மாடல் என்ற பெருமை ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பெற்று இருக்கிறது. இந்த காரில் 6.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்.யு.வி. மாடல் ஆகும். 

ரோல்ஸ் ராய்ஸ் ரெய்த் மாடல் இந்தியாவில் ரூ. 6 கோடியே 22 லட்சம் விலையில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7 கோடியே 21 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த காரில் 6.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இது 4 பேர் பயணம் செய்யக் கூடிய கூப் மாடல் ஆகும். 

ஃபெராரி 812 மாடலின் விலை இந்திய சந்தையில் ரூ. 5 கோடியே 75 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது இருவர் மட்டும் பயணம் செய்யக் கூடிய கூப் மாடல் ஆகும். 

இந்திய சந்தையில் ஃபெராரி F8 ட்ரிபுடோ 2 சீட்டர் கூப் மாடலின் விலை ரூ. 4 கோடியே 02 லட்சம் ஆகும். இந்த கார் விலை உயர்ந்த மாடல்கள் பட்டியலில் எட்டாவது இடம் பிடித்து உள்ளது.

லம்போர்கினி ஹரிகேன் இவோ மாடலின் விலை இந்திய சந்தையில் ரூ. 3 கோடியே 21 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 4 கோடியே 99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது கூப் மாடல் ஆகும்.  

இந்திய சந்தையில் ஆஸ்டன் மார்டின் DB11 மாடலின் விலை ரூ. 3 கோடியே 80 லட்சம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 4 கோடியே 20 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது 2 சீட்டர் கன்வெர்டிபில் மாடல் ஆகும். 

click me!