இந்திய விற்பனையில் மாஸ் காட்டிய டாப் 5 கார்கள்... எந்தெந்த மாடல்கள் தெரியுமா?

First Published | Jul 6, 2022, 9:14 AM IST

இந்திய சந்தை கார் விற்பனையில் கடந்த மாதம் ஆதிக்கம் செலுத்திய கார் மாடல்கள் எவை என்ற பட்டியலை தொடர்ந்து பார்ப்போம். 
 

வேகன் ஆர் மாடல் ஜூன் 2022 விற்பனையில் முதலிடம் பிடித்து அசத்தி இருக்கிறது. ஜூன் 2021 உடன் ஒப்பிடும் போது கடந்த மாதம் மாருதி சுசுகி நிறுவனம் 19 ஆயிரத்து 190 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19 ஆயிரத்து 447 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: குட்டி 'பிரேக்' போதும்.. சார்ஜ் ஏறிடும்.. நாட்டின் அதிவேக பாஸ்ட் சார்ஜரை இன்ஸ்டால் செய்த கியா..!

மாருதி சுசுகி ஸ்விப்ட்:

இந்திய சந்தையில் அதிக யூனிட்கள் விற்பனையான இரண்டாவது கார் என்ற பெருமையை மாருதி சுசுகி ஸ்விப்ட் பெற்று இருக்கிறது. இந்த மாடல் கடந்த மாதம் மட்டும் 16 ஆயிரத்து 213 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஸ்விப்ட் மாடல் 17 ஆயிரத்து 727 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.

இதையும் படியுங்கள்: 418 கிமீ ரேன்ஜ் கொண்ட எலெக்ட்ரிக் கார்... இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்திய வால்வோ...!

Tap to resize

மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரீமியம் ஹேச்பேக் மாடல் பலேனோ கடந்த மாதம் மட்டும் 16 ஆயிரத்து 103 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 14 ஆயிரத்து 071 யூனிட்கள் விற்பனையானது. சமீபத்தில் தான் மாருதி சுசுகி நிறுவனம் 2022 பலேனோ மாடலை அறிமுகம் செய்து இருந்தது. இந்த மாட லில் ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதையும் படியுங்கள்: ரூ. 60 ஆயிரம் வரை தள்ளுபடி... டாடா மோட்டார்ஸ் சூப்பர் அறிவிப்பு..!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் மாடல் கடந்த சில மாதங்களாக இந்திய சந்தையில் வேகமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் 12 ஆயிரத்து 295 நெக்சான் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது 78 சதவீதம் அதிகம் ஆகும். 

ஜூன் 2022 மாதத்தில் ஹூண்டாய் கிரெட்டா மாடல் மொத்தத்தில் 9 ஆயிரத்து 941 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 39 சதவீதம் அதிகம் ஆகும். 

Latest Videos

click me!