தற்போதைய தகவல்களின் படி டி.வி.எஸ். ரோனின் 225சிசி மாடலில் ஏர் கூல்டு, சிங்கில் சிலிண்டர், 225சிசி என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 20 ஹெச்.பி. பவர், 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த மாடல் லோ ஸ்லங் குரூயிசர் மற்றும் ரக்கட் ஸ்கிராம்ப்ளரின் கிராஸ் ஓவர் வெர்ஷன் ஆகும்.
டி.வி.எஸ். ரோனின் 225சிசி பிரீமியம் பிரிவில் அறிமுகமாகிறது. இதில் கோல்டு பினிஷ் செய்யப்பட்ட டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க், அலாய் வீல்கள், எல்.இ.டி. டே-டைம் ரன்னிங் லேம்ப் வழங்கப்படுகிறது.