அதாவது டாடாவின் டியாகோவில் தொடங்கி அனைத்து பெட்ரோல் / சிஎன்ஜி வகை கார்களுக்கும் ரூ.75,000 வரை தள்ளுபடி அறிவிக்கபட்டுள்ளது. ரூ.5.99 லட்சத்தில் இருந்து தொடங்கும் டிகோர் பெட்ரோல் / சிஎன்ஜி வகைகள் மொத்தம் ரூ.45,000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதில் நுகர்வோர் தள்ளுபடி ரூ.30,000 மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகை ரூ.15,000 ஆகும்.
டாடா ஆல்ட்ரோஸ் பெட்ரோல் / சிஎன்ஜி மற்றும் டீசல் வகை மாடல்களுக்கு மொத்தம் ரூ.65,000 தள்ளுபடியுடன் கிடைக்கின்றன. இதில் ரூ.50,000 நுகர்வோர் தள்ளுபடி மற்றும் ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் சலுகை ஆகும். அதிகப்பட்சமாக ஆல்ட்ரோஸ் பெட்ரோல் ரேசர் மாடலுக்கு ரூ.1 லட்சம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இதில் நுகர்வோர் தள்ளுபடி ரூ.85,000மும், எக்ஸ்சேஞ்ச் சலுகை ரூ.15,000மும் ஆகும்.
விலை ரொம்ப கம்மி.. பட்ஜெட் விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உடனே வாங்குங்க!