Published : Feb 04, 2025, 11:27 AM ISTUpdated : Feb 04, 2025, 11:29 AM IST
கியா நிறுவனம் கியா சிரோஸ் எஸ்யூவி மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் விலை என்ன? என்னென்ன சிறப்பம்சங்கள்? உள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
Kia Syros: நடுத்தர மக்கள் வாங்கும் விலை; வாரி வழங்கும் மைலேஜ்; கியாவின் சூப்பர் கார்!
இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வருவதற்கு ஏற்ப வாகன பெருக்கமும் அதிகமாகி விட்டது. நாட்டில் கார்கள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு புதிய ரக கார்களை களமிறக்கி வருகின்றன. அந்த வகையில் கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள கியா நிறுவனம் கியா சிரோஸ் (kia syros) எஸ்யூவி மாடல் காரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
இந்த மாடலின் இன்ஜினை பொறுத்தவரை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சிரோஸ் எஸ்யூவி 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டால் சுமார் 18.1 கிமீ மைலேஜ் கொடுக்கிறது.
24
கியா சிரோஸ் எஸ்யூவி
சிரோஸ் எஸ்யூவி 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மாடலிலும் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்கள் உள்ளன. ஒரு லிட்டர் டீசல் போட்டால் சுமார் 20.75 கிமீ மைலேஜ் கொடுக்கிறது. கியா சிரோஸ் எஸ்யூவி மாடல் காரில் பாதுகாப்பு அம்சங்களுக்கு எந்தவித குறையும் இல்லை. இந்த மாடலின் அனைத்து வேரியண்ட்டிலும் 6 ஏர் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், பிரேக்ஃபோர்ஸ் அசிஸ்ட் சிஸ்டம், ஆன்டி-லாக் பிரேக் சிஸ்டம், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொட்டிக்கிடக்கின்றன. மிக முக்கியமாக இந்த மாடலில் அடாஸ் பாதுகாப்பு தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்டுள்ள LEVEL-2 ADAS பாதுகாப்பு அம்சம் பிளைன்ட் வியூ மானிட்டர், லேன் கிப் அசிஸ்ட், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தால் கார் தானாக நிற்கும் வசதி உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை கொடுக்கிறது.
இது மட்டுமின்றி வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு போனை கனெக்ட் செய்யும் ஹர்மன் கார்டன் 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், டிரினிட்டி பனோரமிக் டிஸ்ப்ளே பேனல், 5 இன்ச் கிளைமேட் கன்ட்ரோல், இரட்டை-பேன் பனோரமிக் சன்ரூஃப் ஆகிய சிறப்பம்சங்களையும் வழங்குகிறது. HTK, HTK+ உள்பட பல்வேறு வேரியண்ட்களில் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. கிளேசியர் ஒயிட் பேர்ல், ஸ்பார்க்லிங் சில்வர், பியூட்டர் ஆலிவ், இன்டென்ஸ் ரெட், ஃப்ரோஸ்ட் ப்ளூ, அரோரா பிளாக் பேர்ல், இம்பீரியல் ப்ளூ மற்றும் கிராவிட்டி கிரே ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
44
கியா சிரோஸ் சிறப்பம்சங்கள்
கியா சிரோஸ் காரின் விலையை பொறுத்தவரை இந்த மாடலின் HTK MT என்ற ஆரம்பட்ட வேரியண்ட் ரூ.8,99,900 என நடுத்தர மக்களும் வாங்கும் வகையில் உள்ளது. இந்த மாடலின் HTX+ என்ற டாப் வேரியண்ட் விலை ரூ.16.99 லட்சம் ஆகும். நடுத்தர விலையில் அனைத்து அம்சங்களுடன் கூடிய ஒரு காரை தேடுபவர்களுக்கு கியா சிரோஸ் பொருத்தமான தேர்வாக இருக்கும்.