குடும்பத்தோட ஜாலியாக பயணிக்கலாம்! கம்மி பட்ஜெட்டில் விசாலமான 7 சீட்டர் ரெலானால்ட் ட்ரைபர் கார்!

First Published | Jun 15, 2024, 5:37 PM IST

எம்.வி.பி. (MVP) எனப்படும் 7 இருக்கைகள் கொண்ட கார்களில் மாருதி சுஸுகியின் XL6 மற்றும் எர்டிகா கார்கள் முன்னணியில் உள்ளன. இந்த வகை கார்களின் ஆரம்ப விலை சுமார் ரூ.9 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை உள்ளது. ஆனால் ரெனால்ட் நிறுவனம் குறைவான பட்ஜெட்டுக்கு ஏற்ற 7 சீட்டர் கார் ஒன்றை வழங்குகிறது.

Renault Triber MVP

எம்.வி.பி. (MVP) எனப்படும் 7 இருக்கைகள் கொண்ட கார்களின் ஆரம்ப விலை சுமார் ரூ.9 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை உள்ளது. ஆனால் ரெனால்ட் நிறுவனம் குறைவான பட்ஜெட்டுக்கு ஏற்ற 7 சீட்டர் கார் ஒன்றை வழங்குகிறது.

Renault Triber 7 Seater

ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) ஒரு பேசிக் எம்.வி.பி. கார் ஆகும். இதில் 7 பேர் வசதியாக அமர்ந்து செல்ல இருக்கைகள் உள்ளன. குடும்பத்துடன் சொகுசாகப் பயணிக்க இந்தக் கார் பொருத்தமாக இருக்கும்.

Tap to resize

Renault Triber price in India

நல்ல பூட் ஸ்பேஸ் கொண்ட ரெனால்ட் ட்ரைபர் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினைக் கொண்டது. மற்ற என்ட்ரி லெவல் 7 சீட்டர் கார்களில் இருப்பதைவிட பெரிய ஹேட்ச்பேக்கையும் கொண்டிருக்கிறது.

Renault Triber specifications

ரெனால்ட் ட்ரைபரின் எஞ்சின் 96 என்எம் முறுக்குவிசையையும், அதிகபட்சமாக 72 பிஎஸ் பவரையும் வெளிப்படுத்தும். லிட்டருக்கு 19 கிமீ மைலேஜ் கொடுக்கக்கூடிய இந்த காரில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் (AMT) ஆப்ஷன்கள் உள்ளன.

Renault Triber family car

டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் மவுண்டட் ஆடியோ, ஃபோன் கண்ட்ரோல், எல்இடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்மார்ட் அக்சஸ் கார்டு, புஷ் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட் என பல கவர்ச்சிகரமான அம்சங்களும் உள்ளன.

Renault Triber safety rating

குடும்பத்துடன் செல்ல கார் வாங்கும்போது பாதுகாப்பு முக்கியத் தேவை. அதை உறுதிசெய்ய 4 ஏர்பேக்குகள் உள்ளன. Global NCAP 4 இந்தக் காருக்கு 4 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு கொடுத்திருக்கிறது.

Renault Triber price

ரெனால்ட் ட்ரைபர் கார் சுமார் ரூ.5.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருந்து தொடங்குகிறது. இதே காரின் டாப் வேரியண்ட் சுமார் ரூ.8.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது.

Latest Videos

click me!