டாடா மோட்டார்ஸ் தனது பிரபலமான பஞ்ச் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடல் குறைந்த விலையில் 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள் போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது.
2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. டாடா மோட்டார்ஸ் தனது பிரபலமான Microsoft-SUV ஆன Punch-ன் முதல் ஃபேஸ்லிஃப்டை இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மும்பையில் நடந்த லைவ் லாஞ்ச் நிகழ்வில் புதிய அப்டேட்களுடன் இந்த கார் அறிமுகமாகி, புக்கிங் தொடங்கியுள்ளது. Punch முதலில் அக்டோபர் 2021-ல் அறிமுகமானது.
25
360 டிகிரி கேமரா வசதி
அதன் பின்னர் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த மாடல், இதுவரை 7 லட்சத்துக்கும் மேல் விற்பனையை கடந்துள்ளது. இப்போது ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டுடன், இது Hyundai Exter, Nissan Magnite, Renault Kiger உள்ளிட்ட போட்டியாளர்களுக்கு நேரடி சவாலாக உள்ளது. புதிய Punch facelift-ன் முக்கிய ஹைலைட் 360-டிகிரி கேமரா வசதி. நகர போக்குவரத்து மற்றும் பார்கிங் சூழலில் இது மிகப் பெரிய உதவியாக இருக்கும்.
35
6 ஏர்பேக் ஸ்டாண்டர்டு
இதோடு 6 ஏர்பேக், ESP, iTPMS, ஹில் டிரைவிங் அசிஸ்ட், ஆட்டோ ஹெட்லாம்ப், ரெயின்-சென்சிங் வைப்பர், ரியர் வைப்பர்-வாஷர் போன்ற பாதுகாப்பு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இன்டீரியரில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிக பிரீமியம் உணர்வை வழங்குகிறது. இதில் 10.25 இன்ச் HD டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இடம் பெற்றுள்ளன. டூயல்-டோன் கேபின், ஆர்ம்ரெஸ்ட் உடன் புதிய கட்டுப்பாடுகள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன.
எக்ஸ்டீரியர் டிசைன் Punch.ev பாணியை நெருக்கமாக பின்பற்றுகிறது. புதுப்பிக்கப்பட்ட LED ஹெட்லாம்ப், ஸ்லீக் DRLகள், புதிய கிரில், ஸ்போர்ட்டி பம்பர், புதிய அலாய் வீல், LED டெயில் லாம்ப் ஆகியவை கிடைக்கின்றன. மேலும் Cyantafic, Caramel, Bengal Rouge, Coorg Clouds என புதிய நிறங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
55
டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் விலைகள்
என்ஜின் தேர்வில், புதிய 1.2L iTurbo பெட்ரோல் (6-ஸ்பீட் MT) அறிமுகமாகி 120PS, 170Nm வெளியிடப்படுகிறது. இதோடு 1.2L Revotron பெட்ரோல் (MT/AMT) மற்றும் ஃபேக்டரி-ஃபிட் CNG ஆப்ஷனும் தொடர்கிறது. மொத்தம் Smart, Pure, Pure+, Adventure, Accomplished, Accomplished+ S என 6 வேரியண்ட்களாக வருகிறது. இதன் விலை ரூ.5.59 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.