இந்தியாவின் நம்பர் 1 CNG கார் எது தெரியுமா? மக்கள் போட்டி போட்டுட்டு வாங்குறாங்க

Published : Jan 13, 2026, 04:15 PM IST

2025 நிதியாண்டில், எரிபொருள் விலை உயர்வால் சிஎன்ஜி கார்களின் தேவை அதிகரித்துள்ளது. வேகன்ஆர் மற்றும் டாடா பஞ்ச் போன்ற மாடல்களும் சிறந்த விற்பனையை பதிவு செய்துள்ளன. சிஎன்ஜி பிரிவில் மாருதி சுசுகி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து வருகிறது.

PREV
14
நம்பர் 1 சிஎன்ஜி கார்

2025 நிதியாண்டில் இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு, தினசரி இயக்கச் செலவுகளைக் குறைக்கும் மக்களின் எண்ணமும் சேர்ந்து சிஎன்ஜி கார்களுக்கு பெரும் தேவையை உருவாக்கியுள்ளது. நகரங்களில் சிஎன்ஜி நிரப்பு நிலையங்கள் அதிகரித்துள்ளன, பெட்ரோல்-டீசலை விட குறைந்த செலவில் பயணம் செய்ய முடிவது இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதன் விளைவாக, 2025 நிதியாண்டின் விற்பனை பட்டியலில் பல சிஎன்ஜி மாடல்கள் முன்னணி இடங்களை பிடித்துள்ளன.

24
மாருதி சுசுகி எர்டிகா

இந்த பட்டியலில் மாருதி சுசுகி எர்டிகா சிஎன்ஜி முதலிடம் பிடித்தது. இது நாட்டின் நம்பர் 1 சிஎன்ஜி கார் என்ற இடத்தைப் பெற்றுள்ளது. 2025 நிதியாண்டில் இந்த மாடல் 1,29,920 யூனிட்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. 7 பேர் பயணிக்கக்கூடிய வசதி, நல்ல மைலேஜ் மற்றும் பராமரிப்பு செலவு குறைவு போன்ற காரணங்களால், பெரிய குடும்பங்களுக்கும் டிராவல் தேவைக்கும் எர்டிகா ஒரு முக்கிய தேர்வாக மாறியுள்ளது.

34
வேகன்ஆர் சிஎன்ஜி

அடுத்த இடங்களில் வேகன்ஆர் சிஎன்ஜி மற்றும் டிசையர் சிஎன்ஜி இடம்பெற்றுள்ளன. வேகன்ஆர் சிஎன்ஜி 1,02,128 யூனிட்கள் விற்பனையுடன் இரண்டாவது இடத்தையும், டிசையர் சிஎன்ஜி 89,015 யூனிட்கள் விற்பனையுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. அதே நேரத்தில் SUV பிரிவிலும் சிஎன்ஜி மாடல்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. இதற்கு உதாரணமாக, டாடா பஞ்ச் சிஎன்ஜி 71,113 யூனிட்கள் விற்பனையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் மாருதி பிரெஸ்ஸா சிஎன்ஜி 70,928 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.

44
டாப் 10 சிஎன்ஜி கார்கள்

மொத்தமாக பார்க்கும்போது 2025 நிதியாண்டின் டாப் 10 சிஎன்ஜி கார்களில் மாருதி சுசுகியின் 7 மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் சிஎன்ஜி பிரிவில் மாருதியின் ஆதிக்கம் தொடர்வது தெளிவாகிறது. மற்றொரு பக்கம் நெக்ஸான், எக்ஸ்எல்6, கிராண்ட் விட்டாரா போன்ற புதிய அல்லது மேம்படுத்தப்பட்ட சிஎன்ஜி மாடல்களும் சந்தையில் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறைந்த இயக்கச் செலவு, தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி வசதி மற்றும் நகர உள்கட்டமைப்பு வளர்ச்சி காரணமாக, எதிர்காலத்தில் சிஎன்ஜி சந்தை இன்னும் வேகமாக உயர வாய்ப்பு உள்ளதாக ஆட்டோ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories