7 சீட்டர் பிரீமியம் SUV விலை அதிகமாயிடுச்சு.. விலை உயர்ந்தாலும் டிமாண்ட் ஏன் குறையல?

Published : Jan 13, 2026, 02:58 PM IST

அதிகம் விரும்பப்படும் பெரிய எஸ்யூவி மாடல்களில் ஒன்றான டொயோட்டா ஃபார்ச்சூனர் விலை அதிகரித்துள்ளது. இப்போது அதன் விலை ரூ.74,000 வரை உயர்ந்துள்ளது.

PREV
13
டொயோட்டா ஃபார்ச்சூனர் விலை உயர்வு

டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்களின் விலையை சமீபத்தில் உயர்த்தியுள்ளது. இதன் தாக்கமாக, நாட்டில் அதிகம் விரும்பப்படும் பெரிய எஸ்யூவி மாடல்களில் ஒன்றான டொயோட்டா ஃபார்ச்சூனர் விலை அதிகரித்துள்ளது. சக்திவாய்ந்த செயல்திறன், பிரீமியம் லுக் மற்றும் கம்பீரமான சாலையிலான தனித்த அடையாளம் ஆகிய காரணங்களால் ஃபார்ச்சூனர் தொடர்ந்து பிரபலமாக இருக்கும் நிலையில், இப்போது அதன் விலை ரூ.74,000 வரை உயர்ந்துள்ளது. வேரியண்ட் அடிப்படையில் ஃபார்ச்சூனர் விலை ரூ.51,000 முதல் ரூ.74,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நிறுவனம் ‘லிமிடெட்-டைம் லீடர்’ வேரியண்ட்டை நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

23
ஃபார்ச்சூனர் புதிய விலை 2026

இந்த விலை உயர்வால், ஃபார்ச்சூனர் அதிகபட்சமாக ரூ.74,000 வரை உயர்ந்திருக்க, ‘லெஜெண்டர்’ வேரியண்ட் விலை ரூ.71,000 வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக, 4×4 வேரியண்ட்களின் விலை மிகவும் உயர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. என்ட்ரி லெவல் மேனுவல் வேரியண்ட்டுக்கு ரூ.51,000 என்ற குறைந்தபட்ச உயர்வு உள்ளது. இதன் தற்போதைய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.34.16 லட்சம் ஆக உள்ளது. முன்பு ரூ.33.65 லட்சமாக இருந்த இது தற்போது அதிகரித்துள்ளது.

33
7 சீட்டர் SUV விலை

குறைந்த விலை ஆட்டோமேட்டிக் வேரியண்ட் சுமார் ரூ.55,000 உயர்வுடன் கிடைக்கிறது. டாப் மாடலாக உள்ள GRS வேரியண்ட்டுக்கு ரூ.74,000 என்ற அதிகபட்ச உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.48.85 லட்சத்தில் இருந்து ரூ.49.59 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலைக்கு உயர்ந்துள்ளது. டொயோட்டா ஃபார்ச்சூனர் என்பது 7 சீட்டர் வசதியுடன் வரும் பெரிய எஸ்யூவி ஆகும். 4×4 திறன், வலுவான கட்டமைப்பு மற்றும் டொயோட்டாவின் நம்பகத் தரம் காரணமாக, விலை உயர்ந்தாலும் சந்தையில் நிலையான வரவேற்பு தொடர்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories