டாடா சியரா எஸ்யூவிக்கு எதிர்பாராத வரவேற்பு கிடைத்துள்ளதால், அதன் உற்பத்தி திறனை டாடா நிறுவனம் அதிகரித்துள்ளது. குறிப்பாக முதல் 24 மணி நேரத்தில் மட்டும் 70,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
சில கார் மாடல்களுக்கு சந்தையில் தேவை திடீரென அதிகரிக்கும் போது, முன்பதிவு மற்றும் டெலிவரி இடையே காத்திருப்பு நேரம் உயர்ந்து வாடிக்கையாளர்கள் சலிப்படைய வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர்க்க, நிறுவனங்கள் உற்பத்தியை உடனடியாக உயர்த்த வேண்டிய கட்டாயம் உருவாகிறது. அதே சூழல் தற்போது டாடா சியரா விஷயத்திலும் ஏற்பட்டுள்ளதாக. முன்பதிவுகள் எதிர்பார்த்ததை விட அதிகமாக வந்ததால், டாடா உற்பத்தி திறன் அதிகரித்துள்ளதாக புதிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
25
டாடா சியரா 70000 முன்பதிவுகள்
முதலில் நிறுவனம் நிர்ணயித்த உற்பத்தி இலக்கு மாதத்திற்கு சுமார் 7,000 யூனிட்கள் என்பதாக இருந்தது. ஆனால் சந்தையில் கிடைத்த வலுவான வரவேற்பை தொடர்ந்து, இந்த இலக்கு மாதத்திற்கு 12,000 முதல் 15,000 யூனிட்கள் வரை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக முதல் 24 மணி நேரத்தில் மட்டும் 70,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் கிடைத்ததாகக் கூறப்படுவது, இந்த மாடலுக்கு இருக்கும் பெரிய எதிர்பார்ப்பைக் காட்டுகிறது.
35
டாடா சியரா உற்பத்தி உயர்வு
சியாரா வருவதன் மூலம் 4.2 முதல் 4.4 மீட்டர் நீளமுள்ள மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் டாடா வலுவான இடத்தை பிடிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அந்த பிரிவில் சில பிரபல மாடல்கள் முன்னணியில் இருக்கும் நிலையில், சியாரா வெளியீடு தரவரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் போட்டி நிறுவனங்களுக்கும் அழுத்தம் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
புதிய தலைமுறை சியாராவில் பல இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் நேச்சுரல் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என பல விருப்பங்கள் இடம்பெற்றுள்ளன. டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் வகைகள் கிடைக்கும் வகையில் டாடா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
55
டாடா சியரா ADAS அம்சங்கள்
அம்சங்கள் பக்கத்தில் ட்ரிபிள் ஸ்கிரீன் அமைப்பு, JBL சவுண்ட் சிஸ்டம், HUD, டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், கனெக்டட் கார் டெக், லெவல்-2 ADAS, 360 கேமரா, வென்டிலேட்டட் சீட்கள் போன்ற வசதிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கிரில் டிசைன், ஆல்பைன் கிளாஸ் ரூஃப், 19 இன்ச் அலாய் வீல்கள் போன்ற லுக்குடன் சியாரா சாலைகளில் புதிய கவனம் பெறும் மாதலாக மாறும் என ஆட்டோ வட்டாரங்கள் கூறுகின்றன.