இந்தியாவுக்கு வரும் கியாவின் புதிய கார்! வெற லெவல் வசதிகளுடன் கார்னிவல் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்!

First Published | Nov 19, 2023, 9:22 PM IST

கொரிய கார் நிறுவனமான கியா தனது கார்னிவல் ஃபேஸ்லிஃப்ட் எம்பிவி காரை விரைவில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த உள்ள நிலையில், அதன் உள்புற தோற்றத்தைக் காட்டும் படங்கள் வெளியாகி கார் பிரியர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளன.

New Kia Carnival Facelift MPV 2024

கியா நிறுனவம் அண்மையில் புதிய கார்னிவலர் காரின் வெளிப்புற டிசைனைக் காட்டும் படங்களை வெளியிட்டது. அடுத்த சில நாட்களில் அட்டகாசமான வடிவமைப்புடன் காணப்படும் உள்தோற்றத்தின் படங்களையும் வெளியிட்டுள்ளது.

New Kia Carnival Facelift MPV 2024 Photos

இந்தக் கார் முந்தைய தலைமுறை மாடலைவிட புதிய தொழில்நுட்பம் மற்றும் கூடுதல் வசதிபகளை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளன என்று கியா கூறுகிறது.

Tap to resize

New Kia Carnival Facelift MPV Interior

கியாவின் கார்னிவல் பேஸ்லிப்ட் எம்.பி.வி. கார் இந்தியாவில் 2024ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதற்கு முன்பே தென் கொரியாவில் இந்த மாதம் விற்பனைக்கு வந்துவிடும்.

New Kia Carnival Facelift MPV Launch in India

உள்ளே இருக்கும் சென்டர் கன்சோல் இரட்டை ஸ்கிரீன்களுடன் மாறுபட்ட வடிவத்தைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு ஸ்கிரீனும் 12.3-இன்ச் அளவில் இருக்கும்.

New Kia Carnival Facelift MPV Specs

8 ஏர்பேக், ADAS தொழில்நுட்பம், 360 டிகிரி கேமரா, ஹைவே டிரைவிங் உதவிக்கான சிஸ்டம் ஆகிய சிறப்பு அம்சங்கள் இந்தக் காரின் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளன.

New Kia Carnival Facelift MPV Price

இத்தனை சிறப்பு அம்சங்கள் தவிர வழக்கமான அடிப்படை அம்சங்களும் புதிய கியா கார்னிவல் காரில் இருக்கும். இதன் விலை ரூ. 40 லட்சம் வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Latest Videos

click me!