ஒரு லட்சத்துக்குள் பைக் வாங்கப் போறீங்களா? அதிக மைலேஜ் தரும் பைக்கை பார்த்து வாங்குங்க!

First Published | Nov 14, 2023, 6:07 PM IST

பைக் வாங்குபவரகள் கவனிக்கும் முக்கிய அம்சங்களில் ஒன்று மைலேஜ். இந்தியச் சந்தையில் குறிப்பாக 100-110 cc  பிரிவில் உள்ள பைக்குகள் எரிபொருள் சிக்கனம் மற்றும் அதிக மைலேஜ் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளன. அந்த வகையில் இந்தியாவில் கிடைக்கும் அதிக மைலேஜ் தரும் பைக்குகள் எவை என்பதை இத்தொகுப்பில் அறிந்துகொள்ளலாம்.

Hero Splendor Plus

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் (Hero Splendor Plus) சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் இந்திய சந்தைக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து சிறந்த மைலேஜ் பைக்காக உள்ளது. மற்ற மாடல்கள் மற்றும் ஸ்கூட்டர்களுக்குக் கடுமையான போட்டியாகவும் இருக்கிறது. இன்றுவரை இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனமாக இந்த பைக் உள்ளது. இது லிட்டருக்கு 80 கி.மீ. மைலேஜை வழங்குகிறது.

Bajaj Platina 100

பஜாஜ் பிளாட்டினா 100 (Bajaj Platina 100) 102 சிசி எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது மற்றொரு சிறந்த மைலேஜ் பைக் என்று வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. லிட்டருக்கு 70 கி.மீ. மைலேஜ் வரை கொடுக்கிறது.

Tap to resize

TVS Radeon

டிவிஎஸ் ரேடியான் (TVS Radeon) உயர் செயல்திறன் மூலம் பலரையும் ஈர்த்துள்ளது. இந்த 109.7 சிசி சிங்கிள் சிலிண்டர் பைக் லிட்டருக்கு 70 கி.மீ. மைலேஜ் கொடுக்கிறது.

Honda Shine 125

ஹோண்டா ஷைன் 125 (Honda Shine 125) பைக் பிரீமியம் தோற்றத்துடன்  123.9 cc எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த பைக் லிட்டருக்கு 65 கிமீ மைலேஜ் கிடைக்கிறது.

Latest Videos

click me!