சோதனை செய்யப்பட்ட மாடல் முழுவதுமாக மறைக்கப்பட்டிருந்தாலும், அதன் ஒட்டுமொத்த தோற்றமும், மஸ்குலர் பாடியும் தற்போதைய மாடலைப் போலவே தெரிகிறது. இருப்பினும், புதிய ஃபார்ச்சூனர் இன்னும் கொஞ்சம் பாக்ஸியான, கம்பீரமான தோற்றத்துடனும், அகலமான முன்பக்க அமைப்புடனும் வர வாய்ப்புள்ளது.
முன்பக்கத்தைப் பொறுத்தவரை, 2026 டொயோட்டா ஃபார்ச்சூனரில் சற்று கீழே பொருத்தப்பட்ட ஸ்ப்ளிட் ஹெட்லேம்ப் அமைப்பு, முற்றிலும் புதிய மற்றும் பெரிய கிரில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர், மெல்லிய LED DRL-கள் மற்றும் சற்று கீழே வைக்கப்பட்ட ஃபாக் லேம்ப் கிளஸ்டர்கள் ஆகியவை இடம்பெறும். பானட்டும் முன்பை விட தட்டையாகக் காணப்படுகிறது.
அலாய் வீல்கள், டெயில்கேட் டிசைன், LED டெயில்லேம்ப்கள் மற்றும் பின்பக்க பம்பர் ஆகியவை முழுமையாக மாற்றியமைக்கப்படும். அதே சமயம், தற்போதைய மாடலில் உள்ள சதுர வடிவ வீல் ஆர்ச்சுகள், ரூஃப் ரெயில்கள் மற்றும் சில டிசைன் அம்சங்கள் அப்படியே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு முக்கிய மெக்கானிக்கல் அப்டேட்டாக, Hilux மாடலில் இருந்து பெறப்பட்ட மேம்படுத்தப்பட்ட IMV லேடர்-ஃப்ரேம் சேஸி இதில் வரலாம்.