பிரிட்ஜர், ரெனால்டின் RGMP (ரெனால்ட் Global Modular Platform) என்ற புதிய பிளாட்ஃபார்மில் உருவாகிறது. இதில் Google உடன் இணைந்து உருவாக்கப்பட்ட நவீன எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அமைப்பு (E&E architecture) இடம்பெற்றுள்ளது. டிசைன் பகுதியில், இந்த ரெனால்டின் பழைய கார்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தோற்றத்தை அளிக்கிறது. உயரமான, பாக்ஸ் ஸ்டைல் வடிவமைப்பு, அக்ரெஸ்ஸிவ் முன்புறம், பெரிய கிரில், LED விளக்குகள் மற்றும் மஸ்குலர் ஸ்கிட் பிளேட் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள். பக்கவாட்டில் 18 இன்ச் அலாய் வீல்கள், திடமான வீல் ஆர்ச்சுகள், மறைவு டோர் ஹேண்டில் போன்றவை அதனை மேலும் பிரீமியம் தோற்றமளிக்கச் செய்கின்றன. பின்புறத்தில் LED டெயில் லைட்கள் மற்றும் ஸ்பேர் வீல் அமைப்பு இந்த SUV-க்கு வலிமையான தோற்றத்தை அளிக்கிறது.
மேலும், இந்த SUV-யில் 200mm வரை கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் சுமார் 400 லிட்டர் பூட் ஸ்பேஸ் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. வெளியே காம்பாக்டாக தோன்றினாலும், உள்ளே விசாலமான கேபின் இடவசதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மைலேஜ், இடவசதி மற்றும் பல இன்ஜின் விருப்பங்களுடன், இந்த புதிய பிரிட்ஜர் SUV இந்திய சந்தையில் ரெனால்டுக்கு ஒரு முக்கிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.