இனி சாவி தேவையில்லை.. ஐபோன் மூலம் காரை இயக்கலாம்.. டாடா + ஆப்பிள் மேஜிக்.. முழு விவரம்!

Published : Apr 24, 2026, 04:17 PM IST

Tata Motors to Launch Apple Car Key: டாடா கார்களை சாவி இல்லாமலேயே திறக்கும் வசதியான கார் கீ வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த அம்சம் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். 

PREV
13
டாடா மோட்டார்ஸ் நிறுவனம்

இந்தியாவில் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நமது நாட்டில் கார்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய சந்தையான இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு கார்களை விற்று வருகின்றன. அந்த வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கார் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. டாடா கார்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது.

23
டாடா கார்களுக்கு 'கார் கீ' அம்சம்

இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மாறி வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப அப்டேட் ஆகியுள்ளது. அதாவது ஆப்பிள் நிறுவனத்தின் புகழ்பெற்ற ‘Car Key’ அம்சம் விரைவில் டாடா மின்சார வாகனங்களில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தொழில்நுட்பத்தின்படி கார் உரிமையாளர்கள் தங்கள் கார் சாவியை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்குப் பதிலாக, உங்கள் iPhone அல்லது Apple Watch-ல் உள்ள 'Apple Wallet' செயலியில் டிஜிட்டல் சாவியைச் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

இந்த கார் கீ அம்சம் எப்படி செயல்படும்?

நீங்கள் காருக்கு அருகே ஐபோனை கொண்டு சென்றாலே போதும். NFC (Near Field Communication) தொழில்நுட்பம் மூலம் காரின் கதவுகள் தானாக திறக்கும். இதைபோல் காரை ஸ்டார்ட் செய்ய அதன் உள்ளே அமர்ந்து போனை அதற்குரிய இடத்தில் வைத்தாலே இன்ஜினை இயக்க முடியும். வண்டி ஸ்டார்ட் ஆகி விடும். மேலும் முக்கிய அம்சமாக பேட்டரி தீர்ந்து போன நிலையிலும் சுமார் 5 மணி நேரம் வரை ஐபோனை பயன்படுத்தி காரை திறக்கும் வசதியும் இதில் உண்டு.

33
இன்டர்னெட் தேவையில்லை

இந்த வசதியின் மிகச்சிறந்த அம்சம் என்னவென்றால் காரைத் திறக்கவோ அல்லது ஸ்டார்ட் செய்யவோ உங்கள் போனில் இன்டர்நெட் தேவையில்லை. ஆப்பிள் வாலட்டில் உள்ள 'Secure Element' சிப் மூலமே இது பாதுகாப்பாகச் செயல்படும். உங்களுக்கு அவசரம் என்றால், போனை அன்லாக் செய்யாமலேயே (Face ID/Passcode இன்றி) காரைத் திறக்க இந்த மோடை ஆன் செய்து கொள்ளலாம்.

மிகவும் பாதுகாப்பான அம்சம்

அண்மையில் நடந்த ஆப்பிள் டெவலப்பர் மாநாட்டில் டிஜிட்டல் கார் கீ வசதியை மேலும் 13 புதிய பிராண்டுகளுக்கு விரிவாக்கம் செய்வதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து இருந்தது. இந்த கார் கீ வசதியில் இடம்பிடித்த ஒரே இந்திய நிறுவனம் டாட்டா மோட்டார்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வசதி பாதுகாப்பதானதா? என்று நீங்கள் கேட்கலாம். 

இந்த டிஜிட்டல் சாவி மிகவும் பாதுகாப்பானது ஆகும். உங்கள் போனை யாராவது திருடினால் கூட, Face ID அல்லது Passcode இல்லாமல் காரை திறக்க முடியாது. மேலும் மெசேஜ் மூலமாக உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுக்குக் காரின் சாவியை பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

டாடாவின் எந்தெந்த மாடல்களுக்கு அப்டேட்?

முதற்கட்ட தகவல்களின்படி டாடாவின் அனைத்து கார்களிலும் இந்த கார் கீ அம்சம் இருக்காது. உயர்தர மாடல்களில் மட்டுமே இருக்கும். அதாவது டாடா கர்வ், டாடா ஹெரியர், டாடா நெக்சான், டாடா பஞ்ச் என உயர்தர கார்களில் இந்த அம்சம் கொண்டு வரப்பட உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories