Top 5 Best Range Budget Electric Cars in India: குறைந்த விலையில் அதிக ரேஞ்ச் கொடுக்கும் இந்தியாவின் டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள், அவற்றின் சிறப்பம்சங்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உச்சம் தொட்டு செல்கிறது. ராக்கெட் வேகத்தில் செல்லும் பெட்ரோ, டீசல் விலையை சமாளிக்க முடியாமல் பலரும் எலெக்ட்ரிக் கார்களுக்கு மாறி வருகின்றனர். மேலும் எலெக்ட்ரிக் கார்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் இருப்பதால் பலரும் அவற்றின் மீது விருப்பம் கொள்கின்றனர். இந்த செய்தியில் விலை குறைவாகவும், அதே வேளையில் அதிக ரேஞ்ச் கொடுக்கும் இந்தியாவின் டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
26
டாடா கர்வ் EV (Tata Curvv EV)
இந்த பட்டியலில் முதலாவது வருவது டாடா கர்வ் எலெக்ட்ரிக் கார் ஆகும். புதிய மாடல் மற்றும் பட்ஜெட் கார்களை தேடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். டாடா கர்வ் EV ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 502 கிமீ முதல் 585 கிமீ வரை மைலேஜ் கிடைக்கும். இந்த மாடலில் 45 kWh மற்றும் 55 kWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள் உள்ளன. மேலும் இதில் லெவல் 2 ADAS பாதுகாப்பு வசதி, நவீன கூபே டிசைன் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. இந்த காரின் விலை ரூ.17.49 லட்சம் ஆகும்.
36
எம்ஜி விண்ட்சர் EV (MG Windsor EV)
எம்ஜி நிறுவனத்தின் எம்ஜி விண்ட்சர் EV இதன் தனித்துவமான தோற்றத்துக்கு பெயர் பெற்றது. இந்த மாடலில் 38 kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 332 கிமீ முதல் 449 கிமீ வரை ரேஞ்ச் கொடுக்கும். இந்த காரில் 15.6 இன்ச் பிரம்மாண்ட டச் ஸ்கிரீன், பானரோமிக் கிளாஸ் ரூஃப், சொகுசான இருக்கைகள் என பல்வேறு வசதிகள் கொட்டிக்கிடக்கின்றன. இதன் விலை ரூ.14 லட்சம்.
இந்தியாவின் நம்பர் 1 எலெக்ட்ரிக் காரான டாடா நெக்ஸான் 45 kWh பேட்டரி என பெரிய பேட்டரி பேக் பெற்றுள்ளது. இந்த மாடல் 489 கிமீ வரை ரேஞ்ச் வழங்குகிறது. இந்த காரில் 6 ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா, சன்ரூஃப், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி என ஏராளமான வசதிகள் உள்ளன. டாடா நெக்ஸான் மாடலின் விலை ரூ.12.49 லட்சம் ஆகும்.
56
மகேந்திரா XUV400 EV (Mahindra XUV400)
தனது வேகத்துக்கு பெயர் பெற்ற மகேந்திரா XUV400 EV வெறும் 8.3 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டிவிடும். இதில் பொருத்தப்பட்டுள்ள 39.4 kWh பேட்டரி பேக் 456 கி.மீ ரேஞ்ச் கொடுக்கிறது. இந்த காரின் உட்புறம் விசாலமான இடவசதி உள்ளதால் மொத்த குடும்பமும் பயணம் செய்ய ஏற்றது. இந்த மாடலின் ஆரம்ப விலை ரூ.15.49 லட்சம் ஆகும்.
66
டாடா பஞ்ச் EV (Tata Punch.ev)
மிக குறைந்த விலையில் அதிக ரேஞ்ச் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு கைகொடுப்பது டாடா பஞ்ச் EV ஆகும். இந்த காரின் லாங் ரேஞ்ச் மாடலில் 35 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 421 கி.மீ வரை தடையின்றி பயணம் மேற்கொள்ள முடியும். இந்த மாடலில் ஏர் பியூரிஃபையர், 10.25 இன்ச் டிஜிட்டல் கிளஸ்டர் வசதிகள் உள்ளன. இந்த மாடல் ஆப்-ரோடு வசதிகளுக்கு ஏற்ப 190mm கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. டாடா பஞ்ச் எலெக்ட்ரிக் காரின் விலை ரூ.9.69 லட்சம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.