இந்த ஆண்டு கோடை வெயில் அதிகமாக இருப்பதால், உங்கள் காரின் பெயிண்ட் மங்க வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க, காரை நிழலில் நிறுத்துவது, தரமான கார் கவர்களைப் பயன்படுத்துவது போன்ற பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவது அவசியம்.
முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக ராஜஸ்தான், தெலங்கானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த வெயிலால் உங்கள் காரின் பெயிண்ட் மங்குவது இயல்புதான். ஆனால், சில எளிய வழிகளைப் பின்பற்றினால், காரின் பெயின்ட் கலரை பாதுகாத்து கொள்ளலாம்.
26
கார் பெயிண்ட் பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்
கறுப்பு, அடர் நீலம், சிவப்பு, கிரே மாதிரி டார்க் கலர் கார்கள், சூரியனின் புற ஊதாக் கதிர்களை (UV rays) வேகமாக ஈர்க்கும். இதனால் இந்த கார்களின் பெயிண்ட் சீக்கிரமே மங்கிப்போகும். இதை தவிர்க்க வேண்டும் என்றால் சூப்பரான வழிமுறைகள் உள்ளன.
36
கார் நிறுத்துமிடம்
கோடை காலமான ஏப்ரல், மே மாத வெயிலில் காரை பார்க் செய்தால், இரண்டே மாதத்தில் பெயிண்ட் மங்கிபோய் விடும். அதனால், நிழலில் பார்க் செய்வது நல்லது. ஆனால், மரத்துக்கு கீழே நிறுத்தினால், பறவை எச்சம், மரக்கிளைகள் விழுந்து பெயிண்ட் டேமேஜ் ஆக வாய்ப்புள்ளது. மேற்கூரை உள்ள பார்க்கிங் இடம்தான் சிறந்த தேர்வாக இருக்கும்.
தலைநகர் சென்னை, பெங்களூரு போன்ற பல நகரங்களில் கார் பார்க் செய்ய இடமே இருக்காது. அப்போது வெயிலில் தான் நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படும். இது மாதிரியான நேரத்தில், நல்ல தரமான கார் கவரைப் பயன்படுத்துங்கள். சூரியனின் UV கதிர்களைத் தடுக்கும் கவர்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. இது ஓரளவுக்கு காரைப் பாதுகாக்கும்.
56
தூசியாலும் பெயிண்ட் கலர் மங்கும்
கோடைக்காலத்தில் கார் மீது படியும் தூசியாலும் பெயிண்ட் மங்கும். அதனால், காரை அடிக்கடி வாஷ் செய்வது நல்லது. கார் வாஷ் செய்யும்போது, முதலில் கார் மீது நன்றாகத் தண்ணீர் ஊற்றி தூசியை அகற்ற வேண்டும்.
66
பெயிண்ட் புரொடெக்ஷன் ஃபிலிம்
காருக்கு வேக்ஸிங் அல்லது சீலன்ட் பயன்படுத்துவது, சூரிய கதிர்களிடமிருந்து ஒரு பாதுகாப்பு கவசம் போல செயல்படும். இது பெயின்ட் மங்குவதைத் தடுக்கும். கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வேக்ஸிங் செய்வது நல்லது. இப்போது செராமிக் கோட்டிங், பெயிண்ட் புரொடெக்ஷன் ஃபிலிம் (PPF) போன்ற நவீன முறைகளும் குறைந்த விலையில் கிடைக்கின்றன.