ஏதர் எனர்ஜி நிறுவனம் 6 லட்சத்துக்கும் அதிகமான மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இதில் பாதி விற்பனை கடந்த 16 மாதங்களில் நடந்துள்ளது.
இந்தியாவின் மின்சார இருசக்கர வாகன சந்தையில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் ஏதர் எனர்ஜி நிறுவனம், ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமான மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிலும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த மொத்த எண்ணிக்கையின் பாதி கடந்த 16 மாதங்களிலேயே விற்று முடிந்துள்ளது. இது இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் உருவாகும் வேகமான வரவேற்பை தெளிவாகக் காட்டுகிறது.
24
ஏதர் எனர்ஜி படைத்த சாதனை
இந்த வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது ஏதர் ரிஸ்ட்டா என்ற புதிய ஸ்கூட்டர். 2024 ஏப்ரலில் அறிமுகமான இந்த மாடல், தற்போது ஏதர் நிறுவனத்தின் விற்பனையில் பெரும்பகுதியை கைப்பற்றியுள்ளது. குடும்ப பயன்பாட்டை மையமாகக் கொண்டு ரிஸ்தா, அதிக இடவசதி, சௌகரியம் மற்றும் நவீன அம்சங்களால் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. இதனால், ஏதர் சந்தை பங்கு மேலும் விரிவடைந்துள்ளது.
34
16 மாதங்களில் விற்பனை இரட்டிப்பு
தேவை அதிகரித்து வருவதால், உற்பத்தித் திறனை உயர்த்த திட்டமிட்டுள்ளது நிறுவனம். தற்போது ஆண்டுக்கு சுமார் 4.2 லட்சம் வாகனங்களை தயாரிக்கும் நிலையில் இருந்து, அதை 14.2 லட்சமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்துள்ளது. இதற்காக மகாராஷ்டிராவில் புதிய உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்வதுடன், சந்தையில் தனது முன்னிலை நிலையை வலுப்படுத்தவும் ஏதெர் முயல்கிறது.
இதோடு மட்டும் இல்லாமல், நிறுவனம் தொழில்நுட்ப மேம்பாடுகளிலும் தீவிர கவனம் செலுத்துகிறது. ‘ஜெனித்’ என்ற புதிய தளத்தை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் அடிப்படையில் எதிர்கால மோட்டார்சைக்கிள்களும் உருவாகும் என்று கூறப்படுகிறது. மேலும், நாடு முழுவதும் 700க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு தனது விற்பனை மற்றும் சேவை வலையமைப்பை விரிவுபடுத்தும் திட்டமும் உள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும், இந்தியாவின் மின்சார வாகன மாற்றத்தில் ஏதர் ஒரு முக்கிய வீரராக திகழப் போகிறது என்பதைக் குறிக்கின்றன.