அதிக மைலேஜ்.. பெரிய சீட்.. ட்ரெண்டிங் அம்சங்கள்.. சுசுகி அவெனிஸ் ஸ்கூட்டரின் விலை எவ்வளவு?

First Published | Jul 26, 2024, 12:34 PM IST

தற்போது அனைவரும் இரு சக்கர வாகனங்களை வாங்கி வருகின்றனர். இந்த வரிசையில் சுசுகி நிறுவனம் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

Suzuki Avenis 2024

சுசுகி அவெனிஸ் 2024 ஸ்கூட்டரின் விலை ரூ. 92,000 (எக்ஸ்-ஷோரூம்). இது நம் நாட்டில் உள்ள அனைத்து சுசுகி டீலர்ஷிப் நெட்வொர்க்குகளிலும் வாங்குவதற்கு கிடைக்கும். இந்த புதிய ஸ்கூட்டர் ஆனது ஜென் Z-ஐ குறிவைத்து, இளைஞர்களை கவரும் வகையில் புதிய அம்சங்களை சேர்த்துள்ளதாக சுசுகி அறிவித்துள்ளது. இந்த புதிய மாடல் ஸ்கூட்டர் நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது.

Suzuki Avenis

இந்த புதிய ஸ்கூட்டரில் 124.3 சிசி இன்ஜின் உள்ளது. இது 8.7hp மற்றும் 10Nm உச்ச முறுக்குவிசையை உற்பத்தி செய்கிறது. அவை Glossy Sparkle Black/ Pearl Vira Red, Champion Yellow No. 2/ Glossy Sparkle Black, Glossy Sparkle Black/ Pearl Glacier White ஆகிய வகைகளில் கிடைக்கிறது. ஸ்போர்ட்டியான தோற்றத்தைக் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Suzuki Avenis Price

யூ.எஸ்.பி, சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், பாதுகாப்பு ஷட்டர் மற்றும் 21.8 லிட்டர் அண்டர் சீட் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இதில் எல்இடி ஹெட் லேம்ப் மற்றும் எல்இடி டெயில் லேம்ப் உள்ளது. இந்த புதிய ஸ்கூட்டரில் ப்ளூடூத் இணைப்புடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் இடம்பெற்றுள்ளது. சுசுகி ரைடு கனெக்ட் ஆப் இருக்கும். இது iOS மற்றும் Android சாதனங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Suzuki Avenis Specifications

இது டர்ன் பை டர்ன் வழிசெலுத்தலை செயல்படுத்துகிறது. ETA புதுப்பிப்புகள், POI தகவல், அழைப்பு எச்சரிக்கைகள், SMS, WhatsApp செய்திகளை இதில் சரிபார்க்கலாம். சுஸுகி ஈஸி ஸ்டார்ட் சிஸ்டம், சைட் ஸ்டாண்ட் இன்டர்லாக் சிஸ்டமும் உள்ளது.

20 ஆயிரம் மட்டும் போதும்.. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டலாம்.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

Latest Videos

click me!