புதிய அவதாரம் எடுத்த மஹிந்திரா தார்! 5 கதவுகளுடன் வெற லெவல் என்ட்ரி கொடுக்கும் தார் ராக்ஸ்!

Published : Jul 20, 2024, 05:15 PM IST

மஹிந்திரா தார் 5-கதவு கொண்ட மாடல் மஹிந்திரா தார் ராக்ஸ் என்று பெயரில் விரைவில் வெளியாக உள்ளது. வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று இந்த காரை அறிமுகம் செய்வதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.

PREV
14
புதிய அவதாரம் எடுத்த மஹிந்திரா தார்! 5 கதவுகளுடன் வெற லெவல் என்ட்ரி கொடுக்கும் தார் ராக்ஸ்!
Mahindra Thar,Mahindra Thar 5-door,Mahindra Thar Roxx,Mahindra SUV

தற்போதைய மஹிந்தார தார் கார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே தேதியில் தான் அறிமுகமானது. இந்நிலையில், 5 கதவு கொண்ட தார் ராக்ஸ் வெளியிட்டுத் தேதி இன்று வெளியாகி இருக்கிறது. தார் ராக்ஸ் பற்றி ஒரு டீஸர் வீடியோவையும் மஹிந்திரா வெளியிட்டுள்ளது.

24
Mahindra Thar,Mahindra Thar 5-door,Mahindra Thar Roxx,Mahindra SUV

மஹிந்திரா தார் ராக்ஸ் சற்று நீளமானதாகவும் வீல்பேஸ் அதிகமாகவும் இருக்கும் என்று டீசர் வீடியோ மூலம் தெரிகிறது. தார் ரோக்ஸ் வடிவமைப்பிலும் நுட்பமான அப்டேட்களைப் பெற்றுள்ளது. இதில் புதிய வட்ட வடிவ ஹெட்லைட்கள் மற்றும் கிரில் உள்ளது. ஆனால் புதிய மஹிந்திரா எஸ்யூவி 'தார்' சீரிஸின் அடையாளத்தையும் தக்கவைத்துள்ளது.

34
Mahindra Thar,Mahindra Thar 5-door,Mahindra Thar Roxx,Mahindra SUV

தார் ராக்ஸ் 2.0லி டர்போ-பெட்ரோல் மோட்டார் மற்றும் 2.2லி டீசல் ஆகிய இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களுடன் இருக்கலாம். என்று கூறப்படுகிறது. 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இருக்கலாம். 4x4 டிரைவ் டிரெய்னுடன் தார் ரோக்ஸில் இருக்கும்.

44
Mahindra Thar,Mahindra Thar 5-door,Mahindra Thar Roxx,Mahindra SUV

குறைந்த விகித கியர்பாக்ஸ், பின்புற ஆக்சில் மெக்கானிக்கல் லாக்கிங் டிஃபெரென்ஷியல் மற்றும் முன்புற ஆக்சில் பிரேக்-லாக்கிங் ஆகியவை அடங்கும். மஹிந்திரா டூ வீல் டிரைவ் வேரியண்ட்களையும் வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5-கதவுகள் கொண்ட மஹிந்திரா தார் ராக்ஸ் சுமார் 13 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் இருந்து 25 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!

Recommended Stories