தற்போது இந்தியாவில் E20, அதாவது 20% எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது. E25, E27, E30 போன்ற கலவைகளும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. விரைவில், இந்தியா E100, அதாவது 100% எத்தனால் எரிபொருள் பயன்பாட்டை நோக்கிச் செல்லும் என்று நிதின் கட்கரி கூறியுள்ளார். டொயோட்டா, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா போன்ற நிறுவனங்களும் தங்களது ஃப்ளெக்ஸ் ஃபியூயல் கார்களைக் காட்சிப்படுத்தியுள்ளன. விரைவில், இந்தியாவில் ஃப்ளெக்ஸ் ஃபியூயல் கார்கள் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும். தற்போது மாருதி இந்த முக்கிய முன்னெடுப்பைச் செய்துள்ளது.
பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஃப்யூல் ஸ்டோரேஜ்
எத்தனால் எரிபொருள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை எளிதில் உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால் வழக்கமான என்ஜின்கள் துருப்பிடிக்க வாய்ப்புள்ளது. இதற்காக மாருதி நிறுவனம் தனது காரில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஃப்யூல் ஸ்டோரேஜ், மேம்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகக் கட்டமைப்பு மற்றும் இக்னிஷன் சிஸ்டம் ஆகியவற்றை மாற்றியமைத்துள்ளது.