ஜான்வியோட அண்ணன் வாங்கிய லோ பட்ஜெட் ஸ்கூட்டர்; அப்படி என்ன ஸ்பெஷல்?

First Published | Sep 27, 2024, 9:23 AM IST

பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் ரூ.1 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கியுள்ளார். சிறிய இடத்தில் நுழைந்து செல்ல இந்த ஸ்கூட்டரை வாங்கியதாக அவர் கூறியுள்ளார். அர்ஜுன் கபூரிடம் ஏற்கனவே பல விலையுயர்ந்த கார்கள் உள்ளன. இவர் நடிகை ஜான்வி கபூரின் அண்ணன் ஆவார்.

Arjun Kapoor EV Scooter

பாலிவுட்டின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவர் போனி கபூர். இவரின் முதல் மனைவிக்கு பிறந்தவர் அர்ஜுன் கபூர். இவர் பாலிவுட் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக உள்ளார். நடிகை ஸ்ரீதேவியை 2வதாக திருமணம் செய்தார் போனி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒருவர் ஜான்வி கபூர், மற்றொருவர் குஷி கபூர். பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார், பைக்குகள் உள்ளன. ஆனால் இதற்கிடையில், அர்ஜுன் கபூர் ரூ.1 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

Bollywood Actor Arjun Kapoor

ஸ்கூட்டரை வாங்கி இனிப்புகளை வழங்கிய அர்ஜுன் கபூர், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கியதற்கான காரணத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். அர்ஜுன் கபூர் பிகாஸ் ஆர்யுவி 350 (BGauss RUV 350) எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கியுள்ளார். இந்த ஸ்கூட்டர் நாட்டின் அனைத்து நகரங்களிலும் கிடைக்கிறது. இது இந்தியாவின் முதல் RUV ஸ்கூட்டர் (ரஃப் அர்பன் வெஹிக்கிள்). முழு உலோக உடலைக் கொண்ட இந்த ஸ்கூட்டர் நகரம், கிராமம், ஆஃப் ரோடு என அனைத்து சாலைகளுக்கும் ஏற்றது. குரூஸ் கட்டுப்பாடு உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன.


BGauss RUV 350

முழு சார்ஜ் ஆக 2.35 மணி நேரம் ஆகும். இதன் விலை ரூ.1.10 லட்சம் ஆகும். இனிப்புப் பெட்டியுடன் வந்த அர்ஜுன் கபூர், புதிய வாகனம் வாங்கிய மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அதே நேரத்தில், நான் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க ஒரு காரணம் இருக்கிறது. சிறிய இடத்தில் நுழைந்து செல்ல இந்த ஸ்கூட்டரை வாங்கியுள்ளதாக கூறினார். அர்ஜுன் கபூரிடம் பல விலையுயர்ந்த வாகனங்கள் உள்ளன. இந்த விலையுயர்ந்த வாகனங்களுடன் ஒப்பிடும்போது, தற்போது வாங்கியுள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகவும் குறைந்த விலை கொண்டது.

Arjun Kapoor car collections

அர்ஜுன் கபூரிடம் உள்ள மிகவும் குறைந்த விலை கொண்ட வாகனம் இதுவாகும். அர்ஜுன் கபூரிடம் ரூ.2.43 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் GLS 600 கார், ரூ.95.35 லட்சம் மதிப்புள்ள லேண்ட் ரோவர் டிஃபெண்டர், ரூ.1.64 கோடி மதிப்புள்ள மசாராட்டி, ரூ.1.30 கோடி மதிப்புள்ள வோல்வோ XC90 கார், ரூ.67.70 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் ML 350 உள்ளிட்ட பல விலையுயர்ந்த வாகனங்கள் உள்ளன. தற்போது அர்ஜுன் கபூர் சில படங்களின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

Janhvi Kapoor Brother Arjun Kapoor

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் சிங்கம் 2 படத்தில் அஜய் தேவ்கனுடன் அர்ஜுன் கபூர் நடித்துள்ளார். மேலும் வருண் தவானுடன் நோ என்ட்ரி 2 உள்ளிட்ட சில படங்களில் அர்ஜுன் கபூர் நடித்து வருகிறார். நடிகை ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆர் உடன் நடித்த தேவாரா படம் இன்று வெளியாகி உள்ளது. நடிகர் அர்ஜுன் கபூர் வாங்கிய இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வீடியோ வைரலாகி வருகிறது.

மொபைல் விலையில் 250 கிமீ மைலேஜ் தரும் ஓலாவின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்!

Latest Videos

click me!