குளிர்காலத்தில் உங்க காரை பராமரிக்க இதைச் செய்ய மறக்காதீங்க!

First Published | Sep 26, 2024, 9:19 AM IST

குளிர்காலம் வரும்போது கார் வைத்திருப்பவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். குளிர் காரில் சில பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தலாம். எனவே, குளிர்காலத்திற்கு முன்பே காரை தயார் செய்வது அவசியம். இதன் மூலம் காரைப் பழுதுபார்க்கும் செலவைக் குறைக்கலாம்.

Lights

விளக்குகள் நன்றாக வேலை செய்யும் நிலையில் இருப்பது நல்லது. குளிர்காலத்தில் சூரியன் சீக்கிரமாக அஸ்தமிக்கிறது. அதாவது பகல் வெளிச்சம் குறைவாகவும், இரவில் கார் வெளிச்சம் அதிகமாகவும் பயன்படுத்தப்படுகிறது. டெயில் விளக்குகள் , ஹெட்லேம்ப்கள், டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் ரிவர்ஸ் ஹெட்லேம்ப்கள் போன்ற கார் விளக்குகள் சரியாக வேலை செய்கிறதா இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும்.

Engine Oil

நீண்ட காலமாக காரை அவ்வப்போது சர்வீஸ் செய்யாமல் பயன்படுத்தி வந்தால், உங்கள் காரில் என்ஜின் ஆயிலை மாற்ற வேண்டிய நேரம் இதுதான். குளிர்ந்த காலநிலைக்கு ஏற்ற இலகுவான எஞ்சின் ஆயிலை பயன்படுத்துவது நல்லது. வானிலைக்கு ஏற்ற பொருத்தமான எஞ்சின் ஆயில் எது என்பதை கார் உற்பத்தியாளரின் கையேட்டில் காணலாம்.


Battery

குளிர்ச்சியான காலநிலையில் இயங்கும் போது கார் பேட்டரி பெரும் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. வெப்பத்தில் இருப்பதை விட குளிரில் பேட்டரியை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். நீண்ட பயணம் மேற்கொள்வதற்கு முன், கார் பேட்டரி நல்ல நிலையில் உள்ளதா என்பதைச் சரிபார்த்துக்கொள்வது நல்லது.

Wind Shield

விண்ட்ஷீல்டில் ஏதேனும் விரிசல் அல்லது நீர் கசிவு இருக்கிறதா என்று கண்டறிய முழுமையான சோதனை செய்வது முக்கியம். குளிரான நேரத்தில் மூடுபனி ஏற்படுவதால் விண்ட்ஷீல்டில் விரிசல் ஏற்பட்டால் சிக்கலாகிவிடும். எனவே விண்ட்ஷீல்ட் ஒழுங்காக இருப்பதை தவறாமல் உறுதி செய்ய வேண்டும்.

Tyre

பொதுவாகவே, டயர்களை அவ்வப்போது பராமரிப்பது மிகவும் அவசியம். டயர் அழுத்தத்தைத் தொடர்ந்து சரிபார்த்து, சரியான வரம்புகளுக்குள் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். டயர் தேய்மானம் அடைந்திருந்தால் புதிய டயரை மாற்றிவிட வேண்டும்.

Latest Videos

click me!