டாடாவின் புதிய பட்ஜெட் எஸ்யூவி கார்! டபுள் சிலிண்டருடன் நெக்ஸான் சிஎன்ஜி அறிமுகம்!

Published : Sep 26, 2024, 10:12 AM ISTUpdated : Sep 26, 2024, 11:09 AM IST

டாடா நெக்ஸான் சிஎன்ஜி எஸ்யூவியை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதாக டாடா மோட்டார்ஸ் இன்று அறிவித்துள்ளது. இது 8 வேரியண்ட்களைக் கொண்டிருக்கிறது.

PREV
16
டாடாவின் புதிய பட்ஜெட் எஸ்யூவி கார்! டபுள் சிலிண்டருடன் நெக்ஸான் சிஎன்ஜி அறிமுகம்!
Tata Nexon CNG SUV launched in India

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டாடா நெக்ஸான் சிஎன்ஜி எஸ்யூவியை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதாக டாடா மோட்டார்ஸ் இன்று அறிவித்துள்ளது. இந்த புதிய CNG மாடல் கார் ஸ்மார்ட் (O), Smart+, Smart+ S, Pure, Pure S, Creative, Creative+ மற்றும் Fearless+ S ஆகிய எட்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

26
Tata Nexon CNG SUV Price

டாடா செகஸான் சிஎன்ஜி காரின் விலை ரூ.8.99 லட்சம் முதல் ரூ.14.59 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும். ரூ.7.99 லட்சம் விலையில் கிடைக்கும் பெட்ரோல் மாடல்களுடன் ஒப்பிடும்போது, ​​சிஎன்ஜி மாடலின் விலை 1 லட்சம் ரூபாய் அதிகம்தான்.

36
Tata Nexon CNG SUV Specs

ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் புக் செய்யலாம். அல்லது அருகிலுள்ள டீலரிடம் மூலமாகவும் இந்தக் காரை முன்பதிவு செய்யலாம். புக்கிங் செய்தவர்களுக்கான டெலிவரி விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

46
Tata Nexon CNG SUV Features

வழக்கமான நெக்ஸான் கார்களுடன் ஒப்பிடும்போது, இந்த ​​சிஎன்ஜி மாடல் கூடுதல் அம்சங்கள் மற்றும் அப்டேட்டுகளைப் பெற்றுள்ளது. ஆனால் வெளிப்புற வடிவமைப்பின் அடிப்படையில் பார்த்தால் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே உள்ளது. பனோரமிக் சன்ரூஃப், இன்ஃபோடெயின்மென்ட்டுக்கான டபுள் 10.25-இன்ச் ஸ்கிரீன் மற்றும் டிஜிட்டல் கிளஸ்டர், வயர்லெஸ் சார்ஜர், 360-டிகிரி கேமரா, எட்டு ஸ்பீக்கர்கள், காற்றோட்டமான முன் இருக்கைகள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள் போன்ற பல முதல் தரமான அம்சங்கள் CNG மாடலிலும் உள்ளன.

56
Tata Nexon CNG SUV booking

உணர்திறன் மிகுந்த வைப்பர்கள், லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டெரி,  வரிசையான LED DRLகள் கொண்ட LED ஹெட்லைட் ஆகியவையும் உள்ளன. காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, ஆறு ஏர்பேக்குகள், ESP, TPMS, முன்புற பார்க்கிங் சென்சார்கள், ஆட்டோ டிம்மிங் IRVM போன்றவை இடம்பெற்றுள்ளன.

 

66
Tata Nexon

பவர்டிரெய்ன் பற்றிப் பார்த்தால், நெக்ஸான் சிஎன்ஜி 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 100 ஹெச்பி ஆற்றலையும் 170 என்எம் முறுக்குவிசையை வெளிப்படுத்துகிறது. ஒப்பீட்டளவில், பெட்ரோல் எஞ்சின் 20hp ஆற்றலை அதிகமாக வெளியிடுகிறது. ஆனால் முறுக்குவிசை சிஎன்ஜியிலும் அதே அளவுக்கே உள்ளது. மேனுவல் கியர்பாக்ஸுடன் இரட்டை சிலிண்டர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சிங்கிள் சிலிண்டர் கார்களை விட இதில் இடவசதி சற்று அதிகமாக இருக்கும்.

click me!

Recommended Stories