நாங்களும் பட்ஜெட் பைக் வச்சிருக்கோம்ல: விலை குறைந்த Scrambler பைக்கை வெளியிடும் Ducati
இத்தாலிய மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான டுகாட்டி, இந்தியாவில் ஸ்க்ராம்ப்ளர் ஐகான் டார்க் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் டூகாட்டி மாடல்களில், ஸ்க்ராம்ப்ளர் ஐகான் தற்போது மிகவும் மலிவானது. 2025 டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் ஐகான் டார்க் எடிஷன், வழக்கமான வேரியண்ட்டைப் போன்ற தொழில்நுட்பம் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களைக் கொண்டுள்ளது, ஆனால் சில வடிவமைப்பு மாற்றங்கள் உள்ளன.