குறைந்த விலையில் இப்போது பைக் வாங்கும் கனவு நனவாகும்!

குறைந்த விலையில் பைக் வாங்க வேண்டும் என்று பலரும் நினைக்கின்றனர். அத்தகைய பைக்குகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

The Best Cheapest Bikes Available Right Now rag

டிவிஎஸ் ரேடியான் (TVS Radeon) பற்றி முதலில் பார்க்கலாம். எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.62,630 முதல் தொடங்குகிறது. எரிபொருள் டேங்க் 10 லிட்டர் மற்றும் மைலேஜ் 73.68 கிமீ/லிட்டர்.

அடுத்து டிவிஎஸ் ஸ்போர்ட் (TVS Sport) உள்ளது. எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.59,881. 7350 ஆர்பிஎம்மில் 6.03 கிலோவாட் சக்தி உற்பத்தி செய்யும் எஞ்சின் உள்ளது. மணிக்கு 90 கிமீ வேகத்தில் செல்லும்.


பஜாஜ் பிளாட்டினா 110 (Bajaj Platina 110) பைக்கில் 115.45 சிசி ஏர்-கூல்டு எஞ்சின் மற்றும் 11 லிட்டர் எரிபொருள் டேங்க் உள்ளது. மைலேஜ் 70 கிமீ/லிட்டர். எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.68,685 முதல் தொடங்குகிறது.

ஹோண்டா சிடி 110 ட்ரீம் (Honda CD 110 Dream) பைக் பற்றி பார்க்கலாம். எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.73,400 முதல் தொடங்குகிறது. 109.51 சிசி ஏர்-கூல்டு எஞ்சின் மற்றும் 9.1 லிட்டர் எரிபொருள் டேங்க் உள்ளது. மைலேஜ் 65 கிமீ/லிட்டர்.

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் (Hero Splendor Plus) 9.8 லிட்டர் எரிபொருள் டேங்க் மற்றும் மைலேஜ் 70 கிமீ/லிட்டர். 97.2 சிசி ஏர்-கூல்டு எஞ்சின் உள்ளது. எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.75,441 முதல் தொடங்குகிறது.

ஹீரோ ஹெச்எஃப் 100 (Hero HF 100) சிறந்த பைக்குகளில் ஒன்று. எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.59,018 முதல் தொடங்குகிறது. 97.2 சிசி ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது.

பஜாஜ் சிடி 110எக்ஸ் (Bajaj CT 110X) டிடிஎஸ் ஐ எஞ்சின் உள்ளது. 8.6 பிஎஸ் பவர் மற்றும் 9.81 என்எம் டார்க் சக்தி உற்பத்தி செய்கிறது. மைலேஜ் 70 கிமீ/லிட்டர். 11 லிட்டர் டேங்க் உள்ளது.

ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) மைலேஜ் 70 கிமீ/லிட்டர். எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.59,998 முதல் தொடங்குகிறது. 97.2 சிசி ஏர்-கூல்டு எஞ்சின் உள்ளது.

பஜாஜ் பிளாட்டினா 100 (Bajaj Platina 100) பற்றி பார்க்கலாம். 115.45 சிசி ஏர்-கூல்டு எஞ்சின் மற்றும் 11 லிட்டர் எரிபொருள் டேங்க் உள்ளது. மைலேஜ் 70 கிமீ/லிட்டர். எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.68,685 முதல் தொடங்குகிறது.

கடைசியாக ஹோண்டா லிவோ (Honda Livo) பற்றி பார்க்கலாம். எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.78,650 முதல் தொடங்குகிறது. 109.51 சிசி ஏர்-கூல்டு எஞ்சின் மற்றும் 9 லிட்டர் டேங்க் உள்ளது. மைலேஜ் 70 கிமீ/லிட்டர்.

23 கிமீ மைலேஜ் தரும் 8 சீட்டர் கார்கள்.. 7 பேருக்கும் மேல டிராவல் பண்ணலாம்!

Latest Videos

vuukle one pixel image
click me!