கியா செல்டோஸ்: இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் எஸ்.யு.வி.க்களில் ஒன்றாக கியா செல்டோஸ் இருக்கிறது. கடந்த மாதத்தில் மட்டும் கியா செல்டோஸ் மாடல் 8 ஆயிரத்து 388 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த மாடல் 8 ஆயிரத்து 549 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது இரண்டு சதவீதம் குறைவு ஆகும்.