மீண்டும் விலை உயர்வு... டாடா மோட்டார்ஸ் அறிவிப்பால் ஷாக் ஆன வாடிக்கையாளர்கள்...!

First Published Jul 10, 2022, 1:52 PM IST

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தொடர்ந்து உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்து வருவதால், கார் மாடல்கள் விலையை டாடா மோட்டார்ஸ் உயர்த்தி இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது பயணிகள் வாகன விலையை உயர்த்துவதாக மீண்டும் அறிவித்து இருக்கிறது. அதன்படி இம்முறை கார் மாடல்கள் புதிய விலை ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன விலை 0.55 சதவீதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

இதையும் படியுங்கள்: ரூ. 1925 கோடி முதலீட்டில் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் நிறுவனம்.. மஹிந்திராவின் வேற லெவல் திட்டம்..!

விலை உயர்வு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன பிரிவின் கீழ் விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து மாடல்கள், வேரியண்டிற்கும் பொருந்தும். 

இதையும் படியுங்கள்: என்னது இத்தனையா? ஒரே சமயத்தில் அதிக கார்களை இழுத்து கின்னஸ் சாதனை படைத்த நபர்..!

உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்து இருப்பதே விலை உயர்வுக்கு காரணம் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இந்தியாவில் உற்பத்தி செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கு காரணம் ஆகும்.

இதையும் படியுங்கள்: கிராஷ் டெஸ்டில் இத்தனை புள்ளிகள் தானா? பயனர்களுக்கு ஷாக் கொடுத்த் பிஎம்டபிள்யூ i4..!

“நிறுவனம் சார்பில் உற்பத்தி செலவீனங்களை எதிர்கொள்ள பெரும் அளவிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், விலை உயர்வை அமலுக்கு கொண்டு வராமல், உற்பத்தி செலவீனங்கள் புது கட்டணத்தை எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது,” என டாடா மோட்டார்ஸ் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.

click me!