கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்டமாக ஆட்டோ எக்ஸ்போ 2023 தொடங்க உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் வருகின்ற ஜனவரி 11 முதல் ஜனவரி 18 வரை இந்த ஆட்டோ எக்ஸ்போ நடைபெற உள்ளது. ஆட்டோ எக்ஸ்போவில் 45 கார் உற்பத்தியாளர்கள் உட்பட 70 கண்காட்சியாளர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
மாருதி சுசுகி (Maruti Suzuki), ஹூன்டாய் (Hyundai), டாடா மோட்டார்ஸ் (Tata Motors) டொயோட்டா (Toyota), கியா (Kia), எம்.ஜி (MG) போன்ற முன்னணி நிறுவனங்கள் ஆட்டோ எக்ஸ்போவில் கலந்து கொள்ள இருக்கிறது.
அனைத்து முன்னணி நிறுவனங்களின் புதிய வாகனங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது. இது வாகனங்களை விரும்புவோர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆட்டோமொபைல்கள், இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், கான்செப்ட் கார்கள், வணிக வாகனங்கள் என அனைத்து முன்னணி நிறுவனங்களின் வாகனங்கள் அணிவகுப்பு ஒரே இடத்தில் இருப்பதால் எக்ஸ்போவுக்கான வரவேற்பு பெரிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.