Ather 450X : புதிய அம்சங்களுடன் கலர்புல்லாக வெளியானது ஏத்தர் மின்சார ஸ்கூட்டர் 450X.. விலை எவ்வளவு தெரியுமா ?

First Published Jan 7, 2023, 3:12 PM IST

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அசத்தலான புதிய மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்தியாவின் மின் வாகன பிரிவில் ஓலா, ஏத்தர் மற்றும் ஹீரோ எலெக்ட்ரிக் ஆகிய நிறுவனங்களின் ஆதிக்கம் மிக பெரிய அளவில் உள்ளது. பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர், ஏத்தர் எனர்ஜி தன்னுடைய புதிய தயாரிப்புகளை பற்றி பல்வேறு அறிவிப்புகளை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ஏத்தர் நிறுவனம், அதன் 450 சீரிஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பல அப்டேட்டுகளுடன் 2023ம் ஆண்டிற்காக அறிமுகப்படுத்தி உள்ளது. தொடக்கத்தில், பிராண்ட் AtherStack 5.0  மிகப்பெரிய மென்பொருள் வெளியிட்டது. கூகுள் மூலம் இயக்கப்படும் வெக்டர் வரைபடங்களையும் இது காண்பிக்கும்.

டாஷ்போர்டு அறிவிப்புகள் மற்றும் டயர் பிரஷர் கண்காணிப்பு போன்ற முக்கியமான தகவல்களை தெரிந்துகொள்ளும் வகையில் வடிவமைப்பட்டுள்ளது. காஸ்மிக் பிளாக், சால்ட் கிரீன், ட்ரூ ரெட் மற்றும் லூனார் கிரே ஆகிய நான்கு வண்ணங்களில் ஏத்தர் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

அவை 450X மற்றும் 450 பிளஸ் ஆகிய இரண்டு ஸ்கூட்டர்களிலும் கிடைக்கும். மேலும் வசதியாக அமரும் வகையில் இருக்கையும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இது இப்போது முன்புறம் குறுகலாகவும், நடுவில் தட்டையாகவும், பின்புறம் செங்குத்தாகவும் உள்ளது.

இந்த நிகழ்வில் புதிய ஆட்டோஹோல்ட் (ஹில்-கிளைம்ப் அசிஸ்ட்) தொழில்நுட்பத்தையும் ஏத்தர் எனர்ஜி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பம் பல்வேறு சென்சார்களுடன் இணைந்து செயல்படுகிறது. மேலும் பிரேக்குகளை வரிசைப்படுத்துகிறது என்றும் கூறியுள்ளனர். மார்ச் 2023க்குள் 1300 ஃபாஸ்ட் சார்ஜர்களுடன் 900 சார்ஜிங் பாயிண்டுகளுடன் ஏத்தர் சார்ஜிங் கிரிட் ஸ்டான்ட் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

வாகன தொழில்துறையில் முதன்முறையாக, ஏத்தர் எனர்ஜி தனது பேட்டரியுடன் கிடைக்கும் உத்தரவாதத் திட்டத்தை மூன்று ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகள் / 60,000 கி.மீகளாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம், சில வருட பயன்பாட்டிற்குப் பிறகு ஸ்கூட்டரின் திறன்  குறைவதைப் பற்றி உரிமையாளர்கள் கவலைப்படத் தேவையில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதுப்பிக்கப்பட்ட Ather 450X ஸ்கூட்டர்களின் விலைகள் ரூ. 1,60,205 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) முதல் தொடங்குகின்றன. அதே நேரத்தில் 450 பிளஸ் ரூ. 1,37,195 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் உள்ளது.

இதையும் படிங்க..11 நாட்கள்.. 13,560 கிமீ தூரம்.. உணவின்றி பறந்து கின்னஸ் சாதனை செய்த பறவை - எங்கு தெரியுமா?

click me!