ஏதர் எனர்ஜி நிறுவனம், 2026 ஜனவரி முதல் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்த உள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 2025 வரை சிறப்பு சலுகைகள் மூலம் வாடிக்கையாளர்கள் பயனடையலாம்.
ஏதர் எனர்ஜி நிறுவனம், 2026 ஜனவரி 1 முதல் தனது அனைத்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையையும் உயர்த்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு அதிகபட்சமாக ரூ.3,000 வரை இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏதர் ஸ்கூட்டர் வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இது முக்கிய தகவலாக பார்க்கப்படுகிறது.
24
ஏதர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
விலை உயர்வுக்கு காரணமாக, மூலப்பொருட்களின் விலை உயர்வு, வெளிநாட்டு நாணய மாற்று விகித மாற்றங்கள் மற்றும் முக்கிய எலக்ட்ரானிக் கூறுகளின் உலகளாவிய விலை உயர்வை ஏதர் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த காரணத்தினால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாகவும், அதனை சமநிலைப்படுத்தவே இந்த விலை திருத்தம் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
34
ஏதர் டிசம்பர் ஆஃபர்
இந்நிலையில், தற்போது ஸ்கூட்டர் வாங்க விரும்புபவர்களுக்கு டிசம்பர் 2025 மாதம் சாதகமாக இருக்கும். ஏதர் நிறுவனம் வழங்கும் ‘எலக்ட்ரிக் டிசம்பர்’ ஆஃபரின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் ரூ.20,000 வரை பலன்கள் கிடைக்கின்றன. இதில் இன்ஸ்டன்ட் கிரெடிட் கார்டு EMI தள்ளுபடி, பண ஊக்கத்தொகை, 8 ஆண்டுகள் இலவச நீட்டிக்கப்பட்ட பேட்டரி வாரண்டி மற்றும் பல நிதி நிறுவனங்களின் ஆதரவு ஆகியவை அடங்கும்.
ஏதர் நிறுவனத்தின் தயாரிப்பு வரிசையில் 450 சீரீஸ் மற்றும் Rizta குடும்ப ஸ்கூட்டர்கள் உள்ளன. 450 சீரிஸ் மாடல்களில் மல்டி-மோட் டிராக்ஷன் கண்ட்ரோல், மேஜிக் ட்விஸ்ட், கூகுள் மேப்ஸ் நெவிகேஷன், டாஷ்போர்டில் வாட்ஸ்அப், கால் மற்றும் மியூசிக் கட்டுப்பாடுகள் போன்ற மேம்பட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. Rizta குடும்ப ஸ்கூட்டர், 56 லிட்டர் சேமிப்பு இடம், அகலமான இருக்கை மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் 2 லட்சம் விற்பனை எண்ணிக்கை கடந்துள்ளது.