டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் ஆகிய இரண்டு மைக்ரோ எஸ்யூவிகளும் பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வுகளாக உள்ளன. செயல்திறன், விலை மற்றும் அம்சங்களில் எது சிறந்தது? என்பதை பார்க்கலாம்.
ஆறு லட்சம் ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்டில் ஒரு ஸ்டைலான, மைக்ரோசாஃப்ட் எஸ்யூவி வாங்க நினைப்பவர்களுக்கு டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் இரண்டு முக்கிய தேர்வுகளாக உள்ளன. நகரப் பயணம் முதல் சிறிய குடும்ப தேவைகள் வரை பூர்த்தி செய்யும் வகையில் இந்த இரண்டு மாடல்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. தோற்றம், அம்சங்கள், செயல்திறன் மற்றும் பாதுகாப்பு ஆகிய அம்சங்களில் எது பணத்திற்கு சிறந்த மதிப்பை தருகிறது என்பதை இப்போது பார்ப்போம்.
24
டாடா பன்ச்
இன்ஜினைப் பொறுத்தவரை, டாடா பன்ச் பையூர் வேரியண்டில் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் ரெவோட்ரான் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இது 86.5 ஹார்ஸ்பவர் மற்றும் 115 Nm டார்க் உற்பத்தி செய்கிறது. பெட்ரோல் மற்றும் பெட்ரோல்-சிஎன்ஜி வேரியன்ட்களில் கிடைக்கும் இந்த மாதலுக்கு, 18.82 கிமீ/லிட்டர் மைலேஜ் என நிறுவனம் தெரிவிக்கிறது. மறுபுறம், ஹூண்டாய் எக்ஸ்டர் EX வேரியண்டில் 1.2 லிட்டர், 4-சிலிண்டர் கப்பா பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது 81.8 ஹார்ஸ்பவர் மற்றும் 113.8 Nm டார்க் வழங்குகிறது. 2025 ஏப்ரலில் இந்த வேரியண்டிலும் சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்படுகிறது.
34
ஹூண்டாய் எக்ஸ்டர்
விலை விவரங்களைப் பார்க்கும்போது, டாடா பன்ச் அடிப்படை வேரியண்ட் ரூ.5.49 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. மிட் வேரியண்ட்கள் ரூ.6.5 முதல் ரூ.8 லட்சம் வரை செல்கின்றன. டாப் வேரியண்ட் ரூ.10.5 லட்சம் வரை விலை பெறுகிறது. சிஎன்ஜி மற்றும் ஏஎம்டி வேரியண்ட்களும் போட்டி விலையில் கிடைக்கின்றன. ஹூண்டாய் எக்ஸ்டர் அடிப்படை வேரியண்ட் ரூ.5.48 லட்சத்திலிருந்து ஆரம்பமாகி, டாப் வேரியண்ட் ரூ.10.75 லட்சம் வரை செல்கிறது. மிட் மற்றும் சிஎன்ஜி வேரியண்ட்கள் பன்சை விட சற்று உயர்ந்த விலையில் உள்ளன.
அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு விஷயத்தில், டாடா பன்ச் ப்யூர் வேரியண்டில் ரியர் பார்க்கிங் சென்சார், சென்ட்ரல் லாக்கிங், பவர் விண்டோக்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற நடைமுறை அம்சங்கள் உள்ளன. 2021-ல் குலோபல் என்சிஏபி-யில் 5 நட்சத்திர மதிப்பீடு பெற்றது இதன் பெரிய பலம். ஹூண்டாய் எக்ஸ்டர் கிராஷ் டெஸ்ட் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், 6 ஏர்பேக்குகள், ஈபிஎஸ், ஐபிடி உள்ளிட்ட 26 பாதுகாப்பு அம்சங்களை தரமாக வழங்குகிறது. பாதுகாப்பில் பன்ச் முன்னிலை வகிக்கிறது, அம்சங்களில் எக்ஸ்டர் கவனம் பெறுகிறது.