அதில், பெரியகுளம்- டாக்டர் கே.கதிர்காமு, மன்னார்குடி- எஸ்.காமராஜ், திருவையாறு- வி.கார்த்திகேயன், காரைக்குடி- தெர்போகி பண்டியன், திருப்பத்தூர்- ஞானசேகர், நாங்குநேரி- இசக்கி முத்து, ஒட்டப்பிடாரம்-ஆர்.சுந்தர்ராஜ், திருச்சி மேற்கு - ராஜசேகரன், சைதாப்பேட்டை-செந்தமிழன், பூந்தமல்லி-டி.ஏ.ஏழுமலை, மடத்துக்குளம்- சி.சண்முகவேலு உள்ளிட்டோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அமமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் டிடிவி.தினகரன் அறிவித்தார்.
அதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விரும்பும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை, தமிழகம் முழுவதும் உள்ள தூய்மைப் பணியாளர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பணி நிரந்தரம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சிகிச்சை,மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார்.