Zodiac signs with Hitler-like traits: குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் ஹிட்லரைப் போன்ற குணாதிசயங்கள் கொண்டவர்களாக இருப்பார்களாம். அந்த ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உலக வரலாற்றில் ஹிட்லர் என்பவர் சர்ச்சைக்குரிய மற்றும் சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். அவருடைய ஆளுமை என்பது கடுமையான அதிகாரம், பிடிவாதம், தீவிர லட்சியம், சில சமயங்களில் இரக்கமற்ற தன்மை ஆகியவற்றின் கலவையாகும். ஜோதிட ரீதியாக ஒருவரின் குணாதிசயங்கள் என்பது கிரகங்களின் சேர்க்கை மற்றும் கிரகங்களின் நிலைகளை பொறுத்தது என்றாலும், சில ராசிக்காரர்கள் ஹிட்லரின் ஆளுமையை கொண்டவர்களாக விளங்குகின்றனர். ஹிட்லரின் முக்கியமான பண்புகளை பிரதிபலிக்கும் சில ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
25
மேஷம்
மேஷ ராசியினர் தைரியம், தன்னம்பிக்கை, ஆற்றல் நிறைந்தவர்கள். இவர்கள் எந்த காரியமானாலும் அதை வீரத்துடன் எதிர்கொள்வார்கள். ஒரு விஷயத்தை அடைய நினைத்து விட்டால் அதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள். அவர்களின் லட்சிய வெறியானது அனைத்தை விடவும் முன்னணியில் இருக்கும். மேஷ ராசிக்காரர்களின் வேகமான உணர்ச்சி வெளிப்பாடு, கோபம், தலைமைப் பண்பு, எந்த சவாலையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஆகியவை ஹிட்லரின் ஆளுமையுடன் பொருந்திப் போகிறது.
35
ரிஷபம்
ஹிட்லர் ஏப்ரல் 20 அன்று பிறந்தவர். இது ரிஷப ராசியின் ஆரம்பக் கட்டத்தில் வருகிறது. ரிஷப ராசிக்காரர்கள் நிலையானவர்கள். அசைக்க முடியாத உறுதிப்பாடு கொண்டவர்கள். இது நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்தப்படும் போது சிறந்ததாக இருக்கும். ஆனால் இது எதிர்மறையாக மாறும் பொழுது பிடிவாதமானதாகவும், மாற்றத்தை ஏற்க மறுக்கும் குணமாகவும் வெளிப்படும். ரிஷப ராசிக்காரர்கள் அதிகாரப் பசியுடனும், பிடிவாத குணத்துடனும் இருக்கின்றனர். ‘தான் சொல்வது தான் சரி’ என்கிற மனோபாவத்தில் இருப்பார்கள். ஒரு இலக்கை அடைவதில் தீராத ஆர்வம் கொண்டிருப்பார்கள். இவர்களின் இந்த குணம் ஹிட்லரின் குணத்துடன் பெரும்பாலும் ஒத்துப் போகிறது.
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் ஆழமான உணர்ச்சிகள் மற்றும் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்கிற வேட்கையை கொண்டிருப்பார்கள். இவர்களின் உள்ளுணர்வு மிகவும் தீவிரமானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும். எல்லாவற்றையும் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற வேட்கை கொண்டிருப்பார்கள். இலட்சியத்தை அடைய வேண்டும் என்கிற துணிவு கொண்டிருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் மற்றவர்களை தங்கள் நலனுக்காக பயன்படுத்துபவர்கள் அல்லது சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்பவர்களாக கருதப்படுகின்றனர். மேலும் ஒருவரை பழிவாங்க வேண்டும் என்று நினைத்து விட்டால் மனதிற்குள்ளேயே வைத்து அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக பழிவாங்காமல் விடமாட்டார்கள்.
55
மகரம்
மகர ராசிக்காரர்கள் அதிகாரத்தை அடைவதிலும், இலக்குகளை நோக்கிய பயணத்திலும் குறியாக இருப்பார்கள். அவர்கள் வெற்றிக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கிறார்கள். ஹிட்லரின் அதிகாரப் பசி மற்றும் தனது லட்சியங்களை அடைவதற்காக அவர் காட்டிய இரக்கமற்றத் தன்மை ஆகியவை மகர ராசிக்காரர்களின் எதிர்மறை குணாதிசயங்களுடன் ஒத்துப் போகிறது. மகர ராசிக்காரர்கள் இலட்சியத்தை அடைவதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் துணிவார்கள். அவர்கள் அதற்காக கடின உழைப்பை வழங்குவார்கள். அதிகாரத்தின் ருசியை ஒருமுறை சுவைத்து விட்டால், அதிலிருந்து வெளிவருவது கடினம். இது ஹிட்லரின் குணங்களோடு வெகுவாக ஒத்துப் போகிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)