Astrology: இந்த 4 ராசியில் பிறந்தவர்கள் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள்.! நட்புக்காக உயிரை கூட கொடுப்பாங்களாம்.!

Published : Nov 14, 2025, 12:22 PM IST

Zodiac signs who make best friends: ஜோதிடத்தின் படி குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் சிறந்த நண்பர்களாக விளங்குவார்களாம். அத்தகைய ராசிகள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
15
சிறந்த நண்பர்களாக விளங்கும் ராசிகள்

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நட்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ரத்த சம்பந்தப்பட்ட உறவுகளுக்கு நிகராகவும், சில சமயங்களில் உறவுகளை விட மேலாகவும் ஒரு நல்ல நண்பரின் ஆதரவு நமக்கு தேவைப்படுகிறது. நம்மை முழுமையாக புரிந்து கொண்டு இன்ப துன்பத்தில் உடன் நிற்கும் நண்பர்களை பெறுவது ஒரு வரம். ஜோதிடத்தின்படி சில ராசியில் பிறந்தவர்கள் சிறந்த நண்பர்களாக இருப்பார்களாம். அவர்களிடம் இருக்கும் சில குணங்கள் அவர்களை சிறந்த நண்பர்களாக மாற்றுகிறது. அத்தகைய ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

25
மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் மிகவும் நட்பாக பழகக் கூடியவர்கள் மற்றும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். அவர்களை நண்பராக பெறுவது என்பது சலிப்பை ஏற்படுத்தாது. மிதுன ராசிக்காரர்கள் புதன் கிரகத்தால் ஆளப்படுபவர்கள். 

புதன் கிரகம் பேச்சு, அறிவு, புத்திசாலித்தனம், தகவல் தொடர்பு ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். மிதுன ராசியை சேர்ந்தவர்கள் தங்கள் நண்பர்களுடன் வெளிப்படையாக பேசுவதையும் அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்பவர்களாகவும் இருக்கின்றனர். 

இவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தவர்கள். நட்பில் உள்ள கருத்து வேறுபாடுகளை புரிந்து கொண்டு, அதற்கேற்ற வகையில் சமாளிக்கத் தெரிந்தவர்கள். 

இவர்கள் புதிய விஷயங்களை தேடுபவர்களாக இருப்பதால், சாகசப் பயணங்கள், புதிய பொழுதுபோக்குகள் என நண்பர்களுக்கு உற்சாகமான அனுபவங்களை கொடுப்பதில் வல்லவர்களாக விளங்குகின்றனர்.

35
கன்னி

கன்னி ராசிக்காரர்கள் மிகவும் அமைதியானவர்கள், விசுவாசமானவர்கள். இவர்கள் மிகவும் நம்பகமாக செயல்படுவார்கள். தங்கள் நண்பரின் வாழ்க்கையில் ஒரு தூணாக இருந்து ஆதரவு தருவார்கள். 

இவர்கள் ஒருவரை நண்பராக ஏற்றுக் கொண்டால் அந்த நட்பில் முழு விசுவாசத்துடன் இருப்பார்கள். மற்றவர்களைப் போல சீக்கிரம் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இவர்கள் புத்திசாலித்தனம், நடைமுறை சார்ந்த சிந்தனையுடன் செயல்படக்கூடியவர்கள். 

நண்பர்களுக்கு பிரச்சனை என்றால் ஆறுதல் சொல்வதோடு நின்று விடாமல் அதற்கான சிறந்த தீர்வை அளிக்க முயற்சிப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் நேர்மையையும் ஒழுங்கையும் விரும்புவார்கள். 

நண்பர்கள் தவறு செய்யும்பொழுது அதை சுட்டிக் காட்ட தயங்குவதில்லை. அதே சமயம் நண்பர்களின் நேர்மறையான விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்டவர்கள்.

45
தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இயற்கையிலேயே ஆர்வமும் நம்பிக்கையும் மிகுந்தவர்கள். இவர்களின் நட்பு வட்டம் பெரும்பாலும் பெரியதாக இருக்கும். 

இவர்கள் தங்கள் நண்பர்களுக்குள் புத்துணர்ச்சியை விதைப்பார்கள். இவர்கள் வாழ்க்கையைப் பற்றிய ஆழமான புரிதலும் அதே சமயம் நகைச்சுவை உணர்வும் கொண்டவர்கள். இவர்கள் பேசும் பொழுது புதிய அறிவை பெறலாம், அதே சமயம் சிரிப்பும், குதூகலமும் நிறைந்திருக்கும். 

தனுசு ராசியைச் சேர்ந்தவர்கள் அதிக சுதந்திரத்தை விரும்புபவர்கள். இவர்கள் தங்கள் நண்பர்களுக்கும் தனிப்பட்ட சுதந்திரத்தை அளிப்பார்கள். நண்பர்களின் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடவோ அல்லது கட்டுப்படுத்தவோ மாட்டார்கள். 

வாழ்க்கையின் சவால்களைக் கூட நேர்மறையாக எதிர்கொள்வார்கள். இவர்களின் இந்த குணம் சோர்வாக உணரும் நண்பர்களுக்கு சிறந்த உந்து சக்தியாக அமையும்.

55
மீனம்

மீன ராசிக்காரர்கள் மிகவும் இரக்க குணம் கொண்டவர்கள் மற்றும் உணர்ச்சிவசப்பட்டவர்கள். தங்கள் நண்பர்களுடன் ஆழமான பிணைப்பை உருவாக்குவார்கள். இவர்கள் மற்றவர்களின் உணர்வுகளை எளிதில் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவர்கள். 

தங்கள் நண்பர்களின் கஷ்டங்களில் முழுமையாக பங்கேற்று அவர்களுக்கு மனரீதியான ஆறுதல் அளிப்பார்கள். மற்றவர்களைப் போல மோதல்களை விரும்பாத இவர்கள், பெரும்பாலும் நட்பை தக்க வைப்பதற்காக விட்டுக் கொடுத்துச் செல்வதற்கு தயாராக இருப்பார்கள்.

நண்பர்கள் தவறு செய்தால் அதை எளிதில் மன்னித்து விட்டு, மீண்டும் பழையபடி நட்பு பாராட்டுவார்கள். இதனால் இவர்களது நட்பு முறிவது மிகவும் கடினமானது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories