Astrology: 500 ஆண்டுகளுக்குப் பின் ஒரே நேரத்தில் வக்ர நிவர்த்தி அடையும் சனி-புதன்.! கோடிகளை குவிக்கப் போகும் ராசிகள்.!

Published : Nov 14, 2025, 11:07 AM IST

Shani Budh Margi 2025 lucky zodiac signs: 500 ஆண்டுகளுக்குப் பிறகு சனி மற்றும் புதன் பகவான் இருவரும் ஒரே நேரத்தில் வக்ர நிவர்த்தி அடைய இருக்கின்றனர். இதன் காரணமாக பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
15
சனி மற்றும் புதன் வக்ர நிவர்த்தி

ஜோதிடத்தின்படி கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுகின்றன. சில சமயங்களில் அவை பின்னோக்கி நகர்ந்தும் வருகின்றன. பின்னோக்கி நகரும் நிலையானது ஜோதிடத்தில் வக்ரப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. 

சனி பகவான் நவம்பர் 28, 2025 மீன ராசியில் வக்ர கதியிலிருந்து மாறி நேர் கதியில் பயணம் செய்ய இருக்கிறார். அதேபோல் புதன் பகவான் விருச்சிக ராசியில் நவம்பர் 17ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் நன்மைகளைப் பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

25
மிதுனம்

மிதுன ராசியின் 6-வது வீட்டில் புதன் பகவானும், 10-வது வீட்டில் சனி பகவானும் வக்ர நிவர்த்தி அடைய இருக்கின்றனர். எனவே மிதுன ராசிக்காரர்கள் தொழில் மற்றும் பதவியில் புதிய உச்சங்களை தொட உள்ளனர். பணியிடத்தில் உங்கள் படைப்பாற்றல் மற்றும் தலைமைத்துவம் பாராட்டப்படும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடுபவர்களுக்கு சாதகமான செய்தி கிடைக்கும். 

வாழ்க்கையில் இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகள் தடைகள் நீங்க தொடங்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அமைதி அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.

35
துலாம்

இந்த காலகட்டத்தில் துலாம் ராசிக்காரர்கள் உடல் நலத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் குறையும். தொழிலில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். வருமானத்தில் இருந்த தடைகள் அகலும். வாழ்க்கையை செழுமையாக நடத்துவதற்கு தேவையான பண வரவு கிடைக்கும். கடன்களை அடைக்கும் வழிகள் உருவாகும். நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருபவர்களுக்கு சாதகமான அல்லது இடைக்கால நிவாரணம் கிடைக்கும்.

45
மகரம்

மகர ராசியின் 3-வது வீட்டில் சனி பகவானும், 11-வது வீட்டில் புதன் பகவானும் வக்ர நிவர்த்தி அடைய இருக்கின்றனர். இதன் காரணமாக மகர ராசிக்காரர்ளுக்கு எதிர்பாராத பண வரவு உண்டாகலாம். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம். இந்த காலகட்டத்தில் தைரியம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை உயரும். 

குழப்பமான முடிவுகளில் இருந்து விடுபட்டு தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி இயல்பு நிலை திரும்பும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி நிலவும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

55
கும்பம்

கும்ப ராசியின் 10-வது வீட்டில் புதன் பகவானும், இரண்டாவது வீட்டில் சனிபகவானும் வக்ர நிவர்த்தி அடைகின்றனர். எனவே கும்ப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி மற்றும் செல்வ செழிப்பை அடைவீர்கள். இந்த காலக்கட்டம் தொழில் மற்றும் வணிகத்திற்கு சாதகமான நேரம் ஆகும். 

புதிய திட்டங்களை தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். செல்வ வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி ஆவதால் நிதி ஆதாயம் பெருகும். பண வரத்து சீராக இருக்கும். கல்வி மற்றும் அறிவு சார்ந்த முயற்சிகள் கைகூடும். தகவல் தொடர்பு சிறப்படையும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories