Daily Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரை.! யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு ஆப்பு? முழு பலன்கள் இதோ.!

Published : Nov 14, 2025, 06:00 AM IST

November 14 Daily Horoscope: நவம்பர் 14, 2025 அன்று 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் மாறுபடுகின்றன. சில ராசிகள் தொழில் மற்றும் நிதியில் வெற்றியைக் காணும் அதே வேளையில், மற்ற ராசிகள் உறவுகளிலும் ஆரோக்கியத்திலும் சவால்களைச் சந்திக்க நேரிடலாம். 

PREV
November 14 Today Rasi Palangal

மேஷம்:

இன்று அமைதியாக இருப்பது அதிக பலன்களைத் தரும். அனைத்திற்கும் உடனடியாக பதில் அளிக்காமல் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. அமைதியுடனும், அதே சமயம் தைரியமாகவும் செயல்படுவது பணியிடத்தில் உள்ள எதிர்ப்புகளை சமாளிக்க உதவும்.

ரிஷபம்:

நீங்கள் பிடித்துக் கொண்டிருக்கும் ஏதோ ஒன்று உங்களுக்கு சுமையாக இருக்கலாம். மன அமைதியை குலைக்கும் விஷயங்களை இன்று விட்டுவிட நேரம் வந்துவிட்டது. வீணான விஷயங்களுக்கு ஆற்றலை செலவிட வேண்டாம்.

மிதுனம்:

நீங்கள் மற்றவர்களுக்கு சொல்லும் சிறந்த ஆலோசனைகளை நீங்கள் கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. அவசர முடிவுகளை தவிர்த்து விடுங்கள்.

கடகம்:

இன்று குடும்பத்தில் உணர்ச்சிபூர்வமான பிணைப்புகள் ஏற்படும். குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். உங்கள் மனதுக்கு ஆறுதல் அளிப்பவர்களின் துணையை நாடுங்கள். உங்கள் மனதை இலகுவாக்கும் நபர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்.

சிம்மம்:

இன்று கலவையான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். உங்களை வாட்டி வதைத்து வந்த விஷயங்களை கைவிட்டு விடுங்கள். சமூக தொடர்புகள் அதிகரிக்கும். தலைமைப் பண்புகள் வெளிப்படும். மாற்றத்தை நோக்கி பயணத்தை மேற்கொள்வீர்கள்.

கன்னி:

இன்று உங்கள் உள் மனம் சொல்வதைக் கேட்டு நடங்கள். உங்கள் உள்ளுணர்வு சரி என்று சொல்வதை கேட்டு முடிவெடுங்கள். உங்கள் பகுப்பாய்வு திறன் மூலம் விஷயங்களை பகுத்தறிந்து அதன் பின்னர் முடிவுகளை எடுங்கள். பணியிடத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

துலாம்:

இன்று உடல் சோர்வு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே ஓய்வு எடுப்பது அவசியம். அவசரத்தை தவிர்த்து தெளிவான முடிவுகளை எடுங்கள். அமைதியாக முடிவெடுப்பது நல்லது. உங்களின் ராஜதந்திரம் காரணமாக தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்:

வழக்கத்தை விட மெதுவாக உங்கள் நாளை தொடங்குங்கள். அவசரப்படுவது தவறுகளுக்கு வழிவகுக்கும். உங்கள் ஆற்றலை செலவிடுவதற்கு முன்னர் நிதானமாக யோசிக்கவும். பழைய அல்லது நிலுவையில் உள்ள வேலைகளை இன்றைய தினம் முடிப்பீர்கள்.

தனுசு:

இன்று பல விஷயங்களை கற்றுக் கொள்ளும் அற்புத நாளாக இருக்கும். உங்கள் யோசனைகள் மற்றும் திறமைகள் பணியிடத்தில் அங்கீகரிக்கப்படும். உங்கள் நீண்ட கால இலக்குகளை அடைவதற்கு உகந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் ஏற்படும்.

மகரம்:

முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கும் பொறுப்புகளை நிர்வகிப்பதற்கும் இன்று ஏற்ற நாளாகும். வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். சனி பகவானின் அருள் உங்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தரும். நீண்ட கால இலக்குகளை அடைய ஏற்ற நாளாகும்.

கும்பம்:

இன்று வீடு பராமரிப்பு பணிகள் அல்லது வீடு கட்டுதல் போன்ற ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு ஏற்ற நாளாகும். உங்கள் தைரியமும், தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் கூடும். பணியிடத்தில் சாதகமான மாற்றங்களை காணலாம்.

மீனம்:

இன்று ஓய்வு எடுக்க வேண்டிய நாளாக இருக்கும். உடல்நிலையில் சற்று பின்னடைவுகளை சந்திக்கலாம். எனவே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உணர்ச்சிபூர்வமாக செயல்பட வேண்டாம். ஒட்டுமொத்த நல்வாழ்வில் கவனம் செலுத்த ஏதுவான நாளாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories