Zodiac signs who love their mother unconditionally: ஜோதிடத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் தங்கள் தாய் மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்டிருப்பார்களாம். அந்த ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணங்கள் உண்டு. சில ராசிகள் தங்கள் குடும்பத்தினர் மீது, குறிப்பாக தங்கள் தாய் மீது அளவற்ற பாசம் கொண்டவர்களாக இருப்பார்களாம். இவர்கள் தங்கள் தாய்க்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பார்களாம். இந்த கட்டுரையில் எந்த ராசிக்காரர்கள் தங்கள் தாயின் மீது அளவற்ற அன்பை பொழிபவர்களாக இருக்கின்றனர் என்பது குறித்து பார்க்கலாம்.
25
கடகம்
கடக ராசிக்காரர்கள் சந்திர பகவானால் ஆளப்படுபவர்கள். இந்த ராசிகளில் பிறந்த ஆண்களுக்கு இயல்பாகவே குடும்ப உணர்ச்சிகள் மற்றும் பிணைப்புகள் அதிகமாக இருக்கிறது. கடக ராசிக்காரர்கள் தங்கள் தாயை வாழ்க்கையின் மையமாக கருதுவார்கள். அவர்களின் மகிழ்ச்சிக்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள். தங்கள் தாயின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். தங்களது தாய்க்கு ஏதேனும் ஒரு பிரச்சனை என்றால் அதை தீர்க்க அவர்கள் உயிரையும் கொடுக்க தயங்க மாட்டார்கள்.
35
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் விசுவாசமான குணம் கொண்டவர்கள். இவர்களுக்கு குடும்பம் என்பது மிகவும் முக்கியம். குறிப்பாக அம்மாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இவர்கள் தங்கள் தாயாருக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான வாழ்க்கையை அளிக்க விரும்புவார்கள். அம்மாவின் சிறு விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக இவர்கள் கடினமாக உழைப்பார்கள். ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை அம்மா என்பவர் ஒரு பொக்கிஷம். அந்த பொக்கிஷத்தை பாதுகாப்பதற்காக அவர்கள் எந்த தடையையும் தாண்டுவார்கள்.
மீன ராசிக்காரர்கள் மிகவும் உணர் திறன் மிக்கவர்கள் மற்றும் உணர்வுகளை ஆழமாக புரிந்து கொள்பவர்கள். இவர்களுக்கு அம்மா உடனான பிணைப்பு மிகவும் ஆழமானது. மீன ராசிக்காரர்கள் தங்கள் துன்பங்களை அம்மாவிடம் மட்டுமே பகிர்ந்து கொள்கின்றனர். மேலும் அம்மாவுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களை அரணாக பாதுகாக்கின்றனர். தங்களது அம்மாவை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கு இவர்கள் எந்த ஒரு தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பார்கள். தங்களது தாயின் அன்பு இவர்களுக்கு ஒரு தெய்வீக உணர்வை அளிக்கிறது.
55
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தங்களது தாயாரை ஒரு ராணியைப் போல மதிக்கின்றனர். இவர்கள் தங்கள் தாயாருக்கு சிறந்த வாழ்க்கையை அளிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தங்களது தாயாரின் சுயமரியாதைக்கு ஏதேனும் பிரச்சனை நேர்ந்தால் அதை எதிர்க்க இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். அம்மாவுக்கு ஏதேனும் ஆபத்து என்றால் அதை எதிர் கொள்ள உயிரையும் கொடுக்க தயங்க மாட்டார்கள் தங்களது தாயைப் பற்றி எப்போதும் பிறரிடம் பெருமையாக கூறுவார்கள்.
தங்களை வடிவமைத்ததில் தாயாருக்கு இருந்த பங்கை எண்ணி அவர்கள் எப்போதும் பெருமை கொள்கிறார்கள். தாங்கள் இந்த உயரத்திற்கு வந்ததற்கு காரணம் தன் தாயார் தான் என்பதில் சிம்ம ராசிக்காரர்கள் உறுதியுடன் இருக்கிறார்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)