Astrology: வக்ர நிவர்த்தி அடையும் புதன் பகவான்.! ராஜ வாழ்க்கை வாழப்போகும் 4 ராசிக்காரர்கள்.! உங்க ராசி இருக்கா?

Published : Oct 05, 2025, 11:32 AM IST

Budhan Vakra Peyarchi 2025: இந்த ஆண்டின் இறுதியில் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைய இருக்கிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
16
Budhan Vakra Peyarchi 2025

வேத ஜோதிடத்தின் படி ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் தங்கள் நிலையை மாற்றுகின்றன. நவ கிரகங்கள் தங்கள் ராசி மற்றும் நட்சத்திரங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றுவதால், சில ராசிக்காரர்கள் நேர்மறையான பலன்களையும், சில ராசிக்காரர்கள் எதிர்மறையான பலன்களையும் அனுபவிக்க உள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டின் இறுதியில், டிசம்பர் மாதத்தில் புதன் பகவான் விருச்சிக ராசியில் வக்ர நிவர்த்தி அடைய இருக்கிறார்.

26
புதன் வக்ர நிவர்த்தி

ஜோதிடத்தில் புதன் பகவான் கிரகங்களின் இளவரசராக அறியப்படுகிறார். இவர் பேச்சு, தொழில், வணிகம், புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். டிசம்பர் 6 ஆம் தேதி இரவு 8:34 மணிக்கு அவர் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வக்ர நிவர்த்தி அடைகிறார். டிசம்பர் 29 ஆம் தேதி வரை அவர் விருச்சிக ராசியில் பயணிப்பார். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை அடைய இருக்கின்றார். அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

36
ரிஷபம்

ரிஷப ராசியின் ஏழாவது வீட்டில் வக்ர பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக ரிஷப ராசிக்காரர்கள் நேர்மறையான பலன்களை அனுபவிக்க உள்ளனர். திருமண வாழ்க்கையில் இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகள் நீங்கி அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ உள்ளது. 

சொந்தமாக வீடு வாங்க முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வீடு, நிலம், மனை வாங்கும் யோகம் கிடைக்கும். புதிய வாகனம் அல்லது கார் வாங்குவீர்கள். நிதிநிலை மேம்படும். வியாபாரம் பெருகி, லாபம் இரட்டிப்பாக கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடையே மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

46
கடகம்

புதன் பகவானின் வக்ர நிவர்த்தி கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்க இருக்கிறது. இந்த காலகட்டத்தில் உங்கள் நற்பெயர் அதிகரிக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன்களை அனுபவிப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். 

உங்கள் முடிவெடுக்கும் திறன் அதிகரிப்பதன் காரணமாக தெளிவான முடிவுகளை எடுத்து, வெற்றிகளை ஈட்டுவீர்கள். பழைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். தொழில் செய்து வருபவர்கள், வணிகர்கள் எதிர்பார்த்து இருந்த வணிக ஒப்பந்தங்கள் கிடைக்கும். வாழ்க்கையில் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிலவும்.

56
கன்னி

கன்னி ராசியின் மூன்றாவது வீட்டில் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதன் காரணமாக கன்னி ராசிக்காரர்கள் வாழ்க்கையின் பல பகுதிகளில் வளர்ச்சியை அனுபவிப்பீர்கள். உங்களது வாழ்க்கை முறையே மாறும். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த வேலைகள் முடிவடையும். இதன் காரணமாக மனம் திருப்தி அடையும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தினரின் தேவையை நிறைவேற்றுவீர்கள். 

அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். வீட்டில் அமைதியான சூழல் நிலவும். குடும்ப உறுப்பினர்களுக்கு ஆச்சரிய பரிசுகளை பரிசளிப்பீர்கள். இதன் காரணமாக ஒற்றுமை மேலோங்கும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்.

66
விருச்சிகம்

விருச்சிக ராசியின் முதல் வீட்டில் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதன் காரணமாக விருச்சிக ராசிக்காரர்கள் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவீர்கள். குறைந்த ஊதியத்தில் கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு கைநிறைய ஊதியத்துடன் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். 

வணிகர்கள் அரசு ஒப்பந்தங்களை பெறுவீர்கள். இதன் காரணமாக லாபம் பெருகும். கடந்த காலத்தில் தடைபட்டு இருந்த வேலைகள் அனைத்தும் நிறைவடையும். சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்புகள் உண்டு.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories