zodiac signs who always fight with others: ஜோதிடத்தின்படி குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் சண்டையிட அல்லது தீவிரமான மோதல்களில் ஈடுபட விரும்புபவர்களாக இருப்பார்களாம். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் தனித்துவமான ஆளுமை, குணாதிசயங்கள் மற்றும் பண்புகள் உண்டு. ஒருவரின் ஆளுமையை நிர்ணயிப்பதில் அவர்களின் ராசி மிகவும் முக்கிய பங்கு வகுக்கிறது. ஜோதிடத்தின் படி குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் தெரிந்தோ தெரியாமலோ சண்டையிட விரும்புவர்களாகவும், குழப்பத்தை உருவாக்குபவர்களாகவும் இருப்பார்களாம். அந்த ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
25
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் செவ்வாய் பகவானால் ஆளப்படுபவர்கள். செவ்வாய் பகவான் போர் கிரகமாக அறியப்படுகிறார்.
இவர் மேஷ ராசிக்காரர்களுக்கு அதீத ஆற்றல், உக்கிரம் மற்றும் ஆக்ரோஷமான தன்மையை அளிக்கிறார்.
இவர்கள் இயல்பிலேயே சவால்களையும், மோதல்களையும் எதிர்கொள்ள தயங்காதவர்கள். எந்த சூழலானாலும் சண்டையிட தயங்க மாட்டார்கள்.
இவர்களுக்கு தங்கள் உணர்வுகளை மறைக்கத் தெரியாது. ஏதாவது ஒரு விஷயம் அவர்களை தொந்தரவு செய்தால் அதை வெளிப்படையாக சொல்வார்கள்.
இவர்களின் இந்த வெளிப்படைத் தன்மை சில நேரங்களில் கடுமையான வாக்குவாதங்களுக்கு வழிவகுக்கும்.
இவர்கள் சண்டையிட்டாலும் நீண்ட நேரம் மனக்கசப்பை வைத்திருக்க மாட்டார்கள். உடனடியாக வெளிப்படுத்திவிட்டு விரைவில் சமரசம் செய்து கொள்வார்கள்.
35
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இயல்பிலேயே தலைமை தாங்கும் பண்பு கொண்டவர்கள். அனைவரின் கவனத்தை ஈர்க்கவும், பாராட்டைப் பெறவும் எப்போதும் விரும்புவார்கள்.
இவர்களின் ஆளுமை அல்லது படைப்பாற்றல் கேள்வி கேட்கப்படும் பொழுது தங்கள் ஈகோவை நிரூபிக்க மோதலில் ஈடுபட தயங்க மாட்டார்கள்.
தங்கள் பெருமையை நிலைநாட்ட சண்டையை ஒரு கருவியாக பயன்படுத்துவார்கள்.
உறவில் போதுமான அங்கீகாரம் அல்லது மரியாதை கிடைக்கவில்லை என்று இவர்கள் உணர்ந்தால் வாக்குவாதங்களில் ஈடுபடுவார்கள். சிறிய பிரச்சனைகளை கூட பெரிய மோதல்களாக மாற்றி விடுவார்கள்.
இவர்களின் சண்டை பொதுவாக அக்கறையின்மையால் வருவதில்லை. மாறாக தங்கள் அன்பு, மரியாதை, விசுவாசம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்கிற ஆசையில் இருந்து வருகின்றன.
விருச்சிக ராசிக்காரர்கள் காதலை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்பவர்கள் மற்றும் ஆழ்ந்த உணர்ச்சிகளைக் கொண்டவர்கள்.
இவர்களின் சண்டைகள் உணர்ச்சி பூர்வமானதாகவும், தீவிரமானதாகவும் இருக்கும்.
துரோகம், பொறாமை, புறக்கணிப்பு ஆகியவற்றை உணரும் பொழுது இவர்களின் எதிர் வினை மிகவும் வலுவாக இருக்கும். இவர்கள் உணர்வுகளை ஆழமாக தோண்டி எடுப்பார்கள் மற்றும் தங்கள் கோபத்தை எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
மற்ற ராசிகளை போல வெளிப்படையாக சண்டையிடாமல் மிகவும் கணக்கிட்டு சண்டையிடுவார்கள். சண்டையின்போது வார்த்தைகளால் உளவியல் ரீதியான தாக்குதலை ஏற்படுத்துவார்கள்.
தங்கள் உணர்வுகளை யாரேனும் புண்படுத்தினால் அந்த அமைப்பையே சீர்குலைப்பதற்கு முயற்சிப்பார்கள்.
இவர்களது மோதல் என்பது தங்களை தாங்களே சுத்தம் செய்யும் ஒருவித சுத்திகரிப்பு செயல்முறையாக இருக்கும்.
55
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் அறிவைப் பெறுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர்கள். நேர்மையை அதிகம் மதிக்கும் நபர்கள். தங்கள் மனதில் பட்டதை அப்படியே பேசுவதற்கு தயங்க மாட்டார்கள்.
இவர்கள் நிறுவப்பட்ட நம்பிக்கைகள், சட்டங்கள் அல்லது விதிகளை கேள்வி கேட்க தயங்க மாட்டார்கள். உண்மையைப் பற்றி விவாதிப்பதில் அல்லது விவாதம் செய்வதில் அலாதி பிரியம் கொண்டவர்கள்.
தங்கள் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் எந்த ஒரு அதிகாரம் அல்லது விதியை கேள்வி கேட்க தயங்க மாட்டார்கள்.
தங்கள் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் விதிகளை மீறுவார்கள். இது பெரும்பாலும் மோதல்களுக்கு வழிவகுக்கும்.
இவர்களின் நேர்மையான பேச்சு சில நேரங்களில் மற்றவர்களுக்கு கடுமையானதாகவும், முரட்டுத்தனமானதாகவும் தோன்றலாம். இது விவாதங்கள் மற்றும் சண்டைகளை தூண்டும்.