ஜோதிடத்தின் படி, ஒருவரது ராசியை வைத்து அவரது எதிர்காலம் மற்றும் ஆளுமையை கணிக்க முடியும். அந்த வகையில் சில ராசிக்காரர்கள் அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் அவர்கள் மனதை விட அழகு தான் முக்கியம் என்பார்கள். நல்ல மனதை பார்ப்பதில்லை. அழகுதான் நம்பிக்கையை தரும் என்று அவர்களது நம்பிக்கை. அத்தகைய ராசிக்காரர்களை குறித்து இந்த பதிவில் இப்போது பார்க்கலாம்.
27
மேஷம் :
ஜோதிடத்தின்படி மேஷ ராசிக்காரர்கள் ரொம்பவே தைரியமாகவும், உற்சாகமாகவும் இருப்பார்கள். ஆனாலும் இந்த ராசிக்காரர்கள் உள்ள அழகைவிட, வெளிப்புற அளவுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் தங்களது வாழ்க்கை துணை ரொம்பவே அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட ஒருவரை தான் திருமணம் செய்து கொள்வார்கள். அழகான ஒருவரை கண்டால் முதல் பார்வையிலே காதலில் விழுந்துவிடுவார்கள்.
37
ரிஷபம் :
ஜோதிடத்தின் படி, ரிஷப ராசிக்காரர்களை சுக்கிரன் ஆளுவதால் இயற்கையாகவே இந்த ராசிக்காரர்களுக்கு அழகின் மீது அதிக ஈர்ப்பு உண்டு. இவர்கள் அழகாகக இருப்பவர்களைக் கண்டால் முதல் பார்வையிலே காதலில் விழுந்து விடுவார்கள். ஆனால் இவர்கள் ஒருவருது தோற்றத்தையும் பார்த்த பிறகு அவரது மனதையும் பார்க்கிறார்கள். அதன் பிறகு தான் அந்த நபரை காதலிக்கலாமா? கூடாதா? என்று சிந்திப்பார்கள்.
ஜோதிடத்தின் படி சிம்ம ராசிக்காரர்கள் இயற்கையாகவே கவர்ச்சியானவர்கள், அழகும் கூட. இதனால் பலர் ஈர்க்கப்படுவார்கள் அழகு பெருமைக்குரியது என்று இவர்களது எண்ணம். மற்றவர்களின் கருணை, நல்ல மனது, விசுவாசத்தை இவர்கள் மதித்தாலும் அழகுதான் முதல் முன்னுரிமை கொடுப்பார்கள். யாராவது அழகாக இருந்தால் உடனே சிம்ம ராசிக்காரர்கள் அவர்களுடன் நட்பு கொள்ள விரும்புவார்கள்.
57
துலாம் :
ஜோதிடத்தின் படி, துலாம் ராசியை வீனஸ் கிரகம் ஆட்சி செய்கின்றது. வீனஸ் என்பது அழகை குறிக்கின்றது. அதனால்தான் என்னவோ துலாம் ராசிக்காரர்கள் இயற்கையாகவே அழகி கண்டு மதி மயங்குகிறார்கள். இவர்கள் தங்களை சுற்றி இருப்பவர்கள் அழகாகவும். கவர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். குறிப்பாக தங்கள் வாழ்க்கையில் வரும் துணையும் ரொம்பவே அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களை தான் இவர்கள் தேர்வும் செய்வார்கள்.
67
மிதுனம் :
ஜோதிடத்தின்படி, மிதுன ராசிக்காரர்கள் அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் ஸ்டைலாகவும், அழகாகவும் இருப்பவர்களை பார்த்தால் அவர்களை ரசிக்க விரும்புவார்கள். இந்த ராசிக்காரர்கள் பிறர் அது புத்திசாலித்தனத்தை பாராட்டினாலும் அழகுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால் தான் என்னவோ அழகான ஒரு நபரைக் கண்டால் அவருக்காக எதையும் செய்ய துணிவார்கள்.
77
தனுசு :
ஜோதிடத்தின்படி இந்த ராசிக்காரர்கள் இயற்கையாகவே சாகசக்காரர்கள் இவர்கள் அழகாகவும் இருப்பார்கள் மேலும் இவர்கள் தங்களுக்கு வரும் துணை அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் அவர்களை தான் அவர்கள் திருமணம் செய்ய விரும்புவார்கள். அழகாக இருப்பவர்களை மட்டும் தான் இவர்கள் ரசிப்பார்கள்.