எல்லோருக்கும் தங்கள் வாழ்க்கை குறித்த கனவுகள் பல இருக்கும். ஆனால் அவை அனைத்தும் நிறைவேறுவது இல்லை. அதிலும் குறிப்பாக நம் வாழ்க்கை நடக்கும் சில விஷயங்கள் நம்முடைய கட்டுப்பாட்டிலே இல்லை. அதாவது பிறப்பு மற்றும் இறப்பு இவை இரண்டும் நம்மை அறியாமலேயே நடக்கும். ஒருவர் பிறந்த தேதியை வைத்து அவரது வாழ்க்கையை கணித்து விட முடியும். அந்த வகையில் சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்த பெண்களுக்கு லக்ஷ்மி தேவியின் அருள் முழுமையாக கிடைக்கும். அவர்கள் தங்களது தந்தை மற்றும் கணவருக்கு செல்வத்தை வழங்குவார்கள். அவற்றின் பட்டியல் இங்கே.
25
3, 7, 11, 21 மற்றும் 29 தேதிகள்..
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் இந்த 5 தேதிகளில் பிறந்த பெண்கள் மீது லட்சுமி தேவியின் அருள் இருக்கும். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் லட்சுமி தேவியை மகிழ்விப்பதாக நம்பப்படுகிறது. இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் இயற்கையாகவே புத்திசாலியாகவும்_ அழகாகவும் இருப்பார்கள். இவர்கள் தங்களது சொந்த வாழ்க்கையில் மட்டுமல்ல, பிறரது வாழ்க்கையிலும் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வருவார்கள் என்று சொல்லப்படுகிறது.
35
தந்தைக்கு நல்ல அதிர்ஷ்டம் :
எண் கணிதத்தின் படி, 3, 7, 11, 21 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்கள் தங்களது தந்தைக்கு நிதி முன்னேற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று கணித நிபுணர்கள் கூறுகின்றனர். இவர்கள் பிறந்த உடனே அவர்களது தந்தையின் வேலையில் நல்ல முன்னேற்றம், புதிய வாய்ப்புகள், நிதி ஆதாயம் போன்ற நல்ல காரியங்கள் நடக்கும். குறிப்பாக நிதி ரீதியாக இந்த தேதிகளில் பிறந்த பெண்களின் தந்தைகளுக்கு பணம் பற்றாக்குறை வரவே வராது.
கணவருக்கு நல்ல அதிர்ஷ்டம் :எண் கணிதத்தின் படி, 3, 7, 11, 21 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்கள் தங்களது தந்தைக்கு பிறகு கணவருக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார்கள் என்று நம்பப்படுகிறது. இவர்கள் தங்கள் கணவரின் வணிக வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் மற்றும் குடும்பத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இவர்கள் கணவரின் வீட்டிற்குள் நுழைந்தவுடன் அந்த வீட்டில் அமைதி, செழிப்பு அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
55
நேர்மறை ஆற்றல் :
எண் கணிதத்தின் படி, 3, 7, 11, 21 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்கள் தங்களது குடும்பத்திற்கு அதிர்ஷ்டசாலிகள் என்று எண் கணித நிபுணர்கள் சொல்லுகின்றனர். இவர்களை சுற்றி துரதிஷ்டம் இருக்காது. நேர்மறை ஆற்றல் தான் இருக்கும். இவர்கள் தங்களது குடும்பத்திற்கு நேர்மறை ஆற்றலை வழங்குவார்கள். இது தேதியில் பிறந்த பெண்கள் தங்களது தந்தை மற்றும் கணவரின் வெற்றிக்கு மறைமுகமாக உதவுவார்கள்.