ஜோதிட சாஸ்திரத்தின் படி மிதுன ராசிக்காரர்கள் பல்துறை திறன் கொண்டவர்கள் என கூறப்படுகிறது இவர்கள் பல கலைகளையும் கற்பதில் ஆர்வம் கொண்டவர்கள். தாங்கள் விருப்பப்பட்ட அனைத்தையும் கற்றுக் கொள்ளாமல் விட மாட்டார்கள். எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதை கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் இவர்களிடம் உண்டு. ஒரு விஷயத்தை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து, அது குறித்த புரிதலை அதிகரித்து, அந்த விஷயத்தை முழுமையாக தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். வாழ்க்கை ஒரு பாடசாலை என்பதை அவர்கள் உணர்கின்றனர். பிறரிடம் ஒரு விஷயத்தை கேட்டு தெளிவு பெறுவதற்கு அவர்கள் தயங்குவதில்லை. இதுவே இவர்கள் உயர்ந்த நிலையை அடைவதற்கு முக்கிய காரணம்.