ஜோதிட சாஸ்திரப்படி, ஒவ்வொரு ராசிக்கும் பெண் பார்க்க சில நாட்கள் மற்றும் நட்சத்திரங்கள் உகந்தவை. இந்த நாட்களில் பெண் பார்த்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். ராசிக்கேற்ற நாட்களில் பெண் பார்க்கும் படலம் அமைந்தால் நல்ல மணமகன் அமைய வாய்ப்புள்ளது.
பெண் பார்க்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு குடும்பத்திலும் மிகுந்த முக்கியத்துவம் பெறும். ஜோதிட நம்பிக்கையின்படி, ஒவ்வொரு ராசிக்கும் சில நாட்கள் மற்றும் நேரங்கள் மிகச் சிறந்தவை என்று கூறப்படுகிறது. இந்த நாளில் பெண் பார்த்தால் நல்ல பரிணாமங்கள் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. மாப்பிள்ளைக்கு நல்ல மணமகன் அமைய ராசிக்கேற்ற நாட்களில் பெண் பார்க்கும் படலம் அமைய வேண்டும் என்கின்றனர் ஜோதிட வல்லுணர்கள்.
214
மேஷம் (மேஷ ராசி)
மேஷம் (மேஷ ராசி) – மேஷ ராசி காரர்களுக்கு புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகள் சிறந்தவை. ரோகிணி, திருவோணம் நட்சத்திர நாளிலும் அவர்கள் பெண் பார்க்க செல்லலாம். இந்த நாட்களை தேர்வு செய்யும் போது பெண் பார்க்கும் படலம் திருமணத்தில் முடியும்.
314
ரிஷபம் (ரிஷப ராசி)
ரிஷப ராசியினருக்கு சனி மற்றும் வெள்ளி கிழமைகள் நல்ல நாள்களாக அமையும், இந்த நாட்கள் மாப்பிள்ளைக்கு பார்க்கும் பெண்ணை மனதிற்கு பிடிக்க வைத்து திருமணத்தை நடத்தி வைக்கும். அதேபோல் உத்திரம், ஹஸ்தம் நட்சத்திரம் கூட ரிஷப ராசியினருக்கு சிறந்த பலனை கொடுக்கும்.
அன்பும் அமைதியும் கொண்ட மிதுன ராசியினருக்கு செவ்வாய் மற்றும் வியாழன் கிழமைகள் பெண்பார்க்க ஏற்ற கிழமைகளாகும். மேலும் சுவாதி, ரேவதி நட்சத்திர நாள் பயனளிக்கும்.
514
கடகம் (கடக ராசி)
கடக ராசியினருக்கு திங்கள், புதன் கிழமைகள் சாதகமாக இருக்கும். அனுஷம், பூசம் நட்சத்திரத்தில் பார்த்தால் சுபம் அதிகம். பெற்றோர்கள் மற்றம் உறவினர்களுடன் பெண் பார்க்கும் நிகழ்வு நடந்தால் நினைத்த துணை கிடைக்கும். நண்பர்களும் உதவி செய்வர்.
614
சிம்மம் (சிம்ம ராசி)
எப்போதும் கம்பீரமாக காணப்படும் சிம்ம ராசியினருக்கு ஞாயிறு மற்றும் வியாழன் நாட்கள் சிறந்தவை. மகம், அவிட்டம் நட்சத்திரம் மிக உகந்தது. விரும்பிய பெண் அமைந்திட இந்த நாட்களை தேர்வு செய்யலாம்.
714
கன்னி (கன்னி ராசி)
கன்னி ராசியினருக்கு புதன் மற்றும் வெள்ளி கிழமைகள் சாதகமாக இருக்கும். ஹஸ்தம், சதயம் நட்சத்திர நாள் மிகவும் சிறப்பு. சரியான நாட்களை தேர்வு செய்தால் தேடிய துணை உடனே கிடைப்பர்.
814
துலாம் (துலாம் ராசி)
துலாம் ராசியினர் வெள்ளி, சனி கிழமைகளில் பெண் பார்க்க செல்லலாம். சுவாதி, உத்திராடம் நட்சத்திரம் சிறந்தவை. காதல் மற்றும் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் என்றாலும் ராசிக்கான நாட்கள் நல்ல பலனை கொடுக்கும் என்கின்றனர் ஜோதிட நிபுணர்கள்.
914
விருச்சிகம் (விருச்சிக ராசி)
விருச்சிக ராசியினர் செவ்வாய் மற்றும் வியாழன் நாட்களில் பெண் பார்க்க செல்லலாம். அனுஷம், கேட்டை நட்சத்திரமும் ஏற்றது.
1014
தனுசு (தனுசு ராசி)
தனுசு ராசியினர் வியாழன், ஞாயிறு நாட்களில் பெண் பார்க்க செல்லலாம். மூலம், அவிட்டம் நட்சத்திரம் உள்ள நாட்களில் பெண் பார்க்க செல்லலாம்.
1114
மகரம் (மகர ராசி)
மகர ராசியினருக்கு சனி மற்றும் புதன் கிழமைகள் உகந்தவை. திருவோணம், உத்திராடம் நட்சத்திரம் சிறந்தது.
1214
கும்பம் (கும்ப ராசி)
செவ்வாய், வெள்ளி சிறந்த நாட்கள். சதயம், ரேவதி நட்சத்திரம் அனுகூலம் தரும்.
1314
மீனம் (மீன ராசி)
வியாழன், திங்கள் நல்ல நாட்கள். பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரம் மிகச் சிறப்பு.
1414
இதனையும் செய்ய வேண்டும்
பெண் பார்க்கும் நாள் தீர்மானிக்கும் போது ராகு காலம், எமகண்டம் தவிர்க்க வேண்டும். சுபஹோரையில் பெண் பார்க்கச் சென்றால் மனநிம்மதி, பரஸ்பர அன்பு ஏற்படும். திதி, யோகம், கரணம் போன்றவற்றையும் பார்க்க வேண்டியது அவசியம். குடும்ப நம்பிக்கையும், ஜாதகர் ஆலோசனையும் வைத்து நாளை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு தனித் தனி ராசிக்கேற்ப நல்ல நாள் மற்றும் நட்சத்திரத்தில் பெண் பார்த்தால், உறவு அமைதியும் வளமும் பெறும் என்று ஜோதிடக் குறிப்புகள் கூறுகின்றன.